வேலூர்,ஜூலை 10- திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்புச் சலுகையை அறிவித்த பிரி யாணி கடையை முதல் நாளிலேயே மூடும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட சம்பவம் வேலூரில் நிகழ்ந்தது. வேலூர்-சித்தூர் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட கடையில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு கோழி பிரியாணி இலவசம் என அறிவிப்பு இந்த உணவகம் வெளியிட்டிருந்தது. இதையடுத்து காலையில் கடை திறக்கப்பட்ட உடனே நூற்றுக்கணக்கானோர் கடை முன்பு குவிந்தனர். மதியம் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் 300க்கும் மேற்பட்டோர் வேலூர் செல்லும் சாலையில் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், காரிலிருந்து இறங்கி அந்த உணவகத்தில் ஆய்வு செய்தார். உணவகத்துக்கு வந்தவர்கள் வெயிலில் அவதி படாதவாறு குடை கள், இருக்கை வசதி செய்து தராமல் அவர்களை அவதிக்குள்ளாக்கிய தாகக் கூறிய பாண்டியன், பொது மக்களை கலைந்து செல்லும் படியும் கடைக்கு சீல் வைக்கும் படியும் உத்தரவிட்டார். இதனால் பிரியாணி வாங்க வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். மாநகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் சான்றிதழ் பெறா மல் அந்த உணவகம் செயல்பட்டு வந்தது மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. தொழில் உரிமச் சான்றிதழ் பெறாததால் உணவக உரிமை யாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.