states

பிரான்ஸ் ஊடகங்களில் மீண்டும் விவாதமான ரபேல் ஊழல்!

புதுதில்லி, ஜூலை 13 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், ரபேல்  ஊழல் விவகாரம் அந்நாட்டு ஊடகங்க ளில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பிரதமரின் தற்போதைய பய ணத்தில், இந்தியா - பிரான்ஸ் இடையே  சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் அள விற்கு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாக உள்ளதாகவும், இதில், பிரான்ஸ் நாட்டிடமிருந்து புதிதாக 26  ரபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்  தமும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இந்திய கடற்படைக்காக 22 ஒற்றை  இருக்கை கொண்ட ரபேல் கடற்படை  விமானம், 4 பயிற்சி விமானம் மற்றும் 3 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்  களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந் தம் குறித்து பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது அறிவிப்பு வெளி யாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

பிரான்ஸ் நீதிபதி இந்திய அரசுக்கு கடிதம்

இந்நிலையில்தான், 2015-இல் மேற்  கொள்ளப்பட்ட ரபேல் ஒப்பந்த ஊழல்  விவகாரங்கள் மீண்டும் விவாதமாகி யுள்ளன. பிரதமர் மோடி பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேரத்தில், கடந்த 2015-16 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ரபேல் ஒப்பந்த  ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கு மாறு பிரான்ஸ் நீதிபதி, இந்திய அர சுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது.

அனில் அம்பானிக்கு வரிக்குறைப்பு செய்த மக்ரோன்

அதுமட்டுமல்லாமல், கடந்த 2015- ஆம் ஆண்டு ரபேல் ஒப்பந்தம் கையெ ழுத்தான போது, பிரான்ஸ் அரசால் அனில் அம்பானிக்கு வரி குறைப்பு தரப்பட்டுள்ள புதிய தகவலையும் மீடியாபார்ட் வெளிக்கொண்டு வந்துள்  ளது.  வரிக்குறைப்பிற்காக, அன்றைய  பிரான்ஸ் பொருளாதார அமைச்சர்  (இப்போது அவர்தான் ஜனாதிபதியாக  இருக்கிறார்) இம்மானுவேல் மக்ரோன் மற்றும் நிதி அமைச்சர் மைக்கேல் சபின் ஆகியோருக்கு அனில் அம்பானி கடி தம் எழுதியதாகவும் மீடியாபார்ட் கூறி யுள்ளது. அனில் அம்பானியின் கோரிக்  கையை ஏற்று, 151 மில்லியன் யூரோ  என்ற வரிக் கட்டணம், இறுதியில் 6.6  மில்லியன் யூரோவாக குறைக்கப்பட்  டது என்பதையும் அம்பலப்படுத்தி யுள்ளது. முன்பு, ரபேல் போர் விமானக் கொள்முதலில் நடந்த ஊழல் முறை கேடுகள் தொடர்பாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘மீடியாபார்ட்’ என்ற  செய்தி இணையதளம்தான் பல்வேறு  புலனாய்வு தகவல்களை வெளிக்  கொண்டு வந்தது. அதே ‘மீடியா பார்ட்’ நிறுவனம்தான் இந்த தகவலை யும் வெளியிட்டுள்ளது.

புதிய ஒப்பந்தத்தில் மோடி அரசு ஆர்வம்

ஆனால், எதுவுமே நடக்காதது போல இருக்கும் பிரதமர் மோடி, பிரான்  சின் பாஸ்டில் தினக் கொண்டாட்டத் தில் கெளரவ விருந்தினராகப் பங்கேற்க வும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், மேலும் 26 ரபேல் போர் விமா னங்கள் மற்றும் 3 நீர்மூழ்கி கொள் முதல் ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும் தயாராகி விட்டார் என்று மீடியாபார்ட் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய இந்த புதிய ஒப்பந் மம் எத்தனை ஆயிரம் கோடி மதிப்பி லானது, ஒரு விமானத்தின் கொள் முதல் விலை எவ்வளவு என்பது இன்  னும் வெளியாகவில்லை. 

நீதிபதி கடிதம் எழுதியதற்கான பின்னணி

ரபேல் போர்விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்  காக, இந்தியாவின் ‘டெப்ஸிஸ் சொல்யூ ஷன்ஸ்’ என்ற நிறுவனத்திற்கு, பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் 1 மில்லியன் யூரோக்களை (ரூ. 8  கோடியே 62 லட்சம்) ‘பரிசாக’ வழங்கியதை, அந்நாட்  டின் ஊழல் தடுப்புப் பிரிவான ‘ஏஜென்ஸ் பிராங்கா யிஸ் ஆன்டிகரப்ஷன் (AFA) கண்டுபிடித்தது.  இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கை  அலுவலகத்திற்கு (CAG) இணையான இந்த பிரான்ஸ்நாட்டு நிறுவனம், 2017-ஆம் ஆண்டில்  கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல் முறைகேடு களை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டு, அதன்  பணிகளை மேற்கொண்ட போதுதான், ‘வாடிக்கையா ளர்களுக்கு பரிசு’ என்ற தலைப்பில் 5 லட்சத்து 8 ஆயி ரத்து 925 யூரோக்கள் மதிப்பிலான லஞ்சத்தைக்  கண்டுபிடித்தது. இந்தியாவிற்கு ரபேல் விமானங்க ளைத் தயாரித்து வழங்கிய ‘டஸ்ஸால்ட்’ நிறுவனமும், லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டதாக கூறப் பட்டது. ஆதாரப்பூர்வமாகவே, ரூ. 8 கோடியே 62 லட்சம்  லஞ்சம் வாங்கிய ‘டெப்ஸிஸ் சொல்யூஷன்ஸ்’ நிறு வனம், இந்திய அரசுக்கு, 36 ரபேல் போர் விமானங்  களை தயாரித்துக் கொடுப்பதற்கான - டஸ்ஸால்டின் துணை ஒப்பந்தக்காரர்களில் ஒன்று என்பது முக்கிய மானது. அதுமட்டுமல்ல, ‘டெப்ஸிஸ் சொல்யூஷன்ஸ்’ நிறுவனம் மூன்று தலைமுறைகளாக விமானம் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில்களில் இடைத்தரகர்களாக விளங்கும் குப்தா குடும்பத்தி னருக்குச் சொந்தமானது என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆவணங்களைத் திருடித் தந்த சுஷென் குப்தா?

இவற்றையெல்லாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டி யிருந்த பிரான்ஸ் நாட்டின் ‘மீடியாபார்ட்’ செய்தி நிறுவனம், “ரூ. 8 கோடியே 62 லட்சம் லஞ்சம் வாங்கிய  அந்த நபர், பாதுகாப்புத்துறை சம்பந்தமான மற்றொரு ஒப்பந்த விவகாரத்தில் அண்மையில் இந்திய அமலாக்கத்துறையால் கைது செய்யப் பட்டார்” என்று ‘ஏஜென்ஸ் பிராங்காயிஸ் ஆன்டிக ரப்ஷன் (AFA) சரியாக கண்டுபிடித்தது; அதாவது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி இடைநிலை ஒப்பந்தத்தில் கைது செய்யப்பட்ட சுஷேன் மோகன் குப்தாவையே மறைமுகமாக ஏஎப்ஏ அமைப்பு குறிப்பிட்டது. குப்தா, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து ரகசிய ஆவணங்களைப் பெற்று, டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு வழங்கிய தற்காகவே அவருக்கு ரூ. 8 கோடியே 62 லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தது. மீடியாபார்ட் இதழில் வெளியான செய்திகள் மற்றும் பிரான்சை சேர்ந்த பொருளாதார குற்றங்  களை விசாரித்து வரும் ஷெர்பா என்ற தொண்டு நிறு வனம் அளித்த புகார் ஆகியவற்றின் அடிப்படையில் ரபேல் ஊழல் விவகாரத்தில் விசாரணை நடத்த, ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் என்ற நீதிபதியை பிரான்ஸ்  அரசு நியமித்தது. இதில், பிரான்ஸ் நீதிமன்றத்தில் தற்போதும் விசாரணை நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில்தான், இந்தியப் பிரதமர் மோடி  பிரான்ஸ் வந்துள்ள நிலையில், ரபேல் ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கு மாறு இந்திய அரசுக்கு, இவ்வழக்கை விசாரித்து வரும்  பிரான்ஸ் நீதிபதி கடிதம் எழுதியுள்ளதாக மீடியாபார்ட் நிறுவனம் புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. 5 ஆண்டுகளாக விசாரணை இல்லை ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ முறைகேடு தொடர் பான விசாரணையின் போதே, இந்திய புலனாய்வு அமைப்பின் கோரிக்கை பேரில், சுஷென் மோகன்  குப்தா தொடர்பான ஆவணங்களை மொரீஷியஸ் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அளித்திருந் தது. அதில், டஸ்ஸால்ட் நிறுவனம், 2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் சுஷென் குப்தா வுக்கு 7.5 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 64.26 கோடி ரூபாய்) அளவிற்கான தொகையை போலி ரசீதுகள் (False Invoices) மூலம் வழங்கியதாக தெரி வித்திருந்தது. பாஜக ஆட்சியில் 2015-ஆம்  ஆண்டு  டஸ்ஸால்ட் நிறுவனம் உடனான ரபேல் போர் விமான  ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட போது, இதிலும் சுஷென் குப்தாவுக்கு (ரூ. 8 கோடியே 62 லட்சம் லஞ்சம்)  பங்கு உள்ளதாக 2018-இல் சந்தேகம் எழுப்பப்பட்டு இருந்தது. ஊழல் தொடர்பான இந்த ஆவணங்கள் 2018 அக்டோபர் 11 அன்றே கிடைத்தும், இந்திய புல னாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை நடத்த வில்லை” என்பதுதான் குற்றச்சாட்டாகும்.