states

குடியரசுத் தலைவர் இன்று சென்னை வருகை

சென்னை, ஆக.4- குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக திரவுபதி முர்மு சென்னைக்கு சனிக்கிழமை (ஆக.5) வருகிறார். இந்திய விமானப்படை விமானத்தில் மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு மாலை 6.50 மணிக்கு வந்து  இறங்கும் அவரை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், ஆளுநர் மற்றும் முக்கிய பிரமு கர்கள் வரவேற்கின்றனர். பட்டமளிப்பு விழா வரவேற்புக்கு பிறகு, கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று  தங்குகிறார். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில்  கலந்து கொண்டு மாணவர்க ளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப் புரையாற்றுகிறார். இந்த பட்டமளிப்பு விழா  கிண்டி அண்ணா பல்கலைக் கழக அரங்கில் நடத்தப்படுகி றது. விழாவில் குடியரசுத் தலை வருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் செனட் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி  முடிந்ததும் ஆளுநர் மாளி கைக்கு செல்லும் குடியரசுத் தலைவர், அங்கு முக்கிய பிரமு கர்கள் சிலரை சந்திக்கிறார்.

கலந்துரையாடல்

அதன் பிறகு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் திரவுபதி முர்மு கலந்து கொண்டு  பேசுகிறார். மாலை 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருந்து அளிக்கிறார்.

புதுச்சேரிக்கு பயணம்...

ஆக. 7ஆம் தேதி சென்னை பழைய விமான நிலையம் சென்று ஹெலிகாப்டர் மூலம்  காலை 9.55 மணிக்கு புதுச்சே ரிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிறகு, புதுச்சேரி  கடற்கரை சாலையில் உள்ள  நீதிமன்ற விருந்தினர் மாளிகை யில் தங்குகிறார். பின்னர் செவ்வாய்க்கிழமை (ஆக.8) மாலை 5.05 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு வழியனுப்பு விழா நடக்கிறது. பின்னர் இந்திய விமானப்படை விமானத்தில் தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு

குடியரசுத் தலைவர் வருகை யையொட்டி, சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் பலத்த  போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மேலும், தில்லியில் இருந்து  வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆளுநர் மாளி கையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரை பாது காப்பு ஒத்திகை நடத்தி கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த ஒத்திகை 2 முறை நடத்தப் பட்டுள்ளது. இதேபோன்று ஆளுநர் மாளிகை, சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக் கப்பட்டுள்ளது.

பொம்மன்-பெள்ளிக்கு பாராட்டு

முன்னதாக ஆஸ்கர் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளியை சந்தித்து பாராட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சனிக் கிழமை காலை (ஆக.5) முது மலைக்கு செல்கிறார். அங்கு தெப்பக்காடு வளர்ப்பு யானை கள் முகாமிற்கு சென்று உரை யாற்றுகிறார். பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்பதால் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் மைசூர் செல்லும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து சென்னை வரு கிறார்.