states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் டெண்டரில் பங்கேற்க விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர்  6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பெளர்ணமி நாட்களில் ஆந்திரா, தெலுங் கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சமூக நல அலுவலர்கள், காவல்துறையினர் வியா ழனன்று சோதனை மேற்கொண்டனர். சோதனை யில் 20-க்கும் மேற்பட்ட சிறுவர்களை மீட்டு அரசு  காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களை அழைத்து வந்தவர்கள் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 29 முதல் ஆம்னி பேருந்து களில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரி மையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில், வியாழனன்று தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.560 குறைந்தது. சென்னையில் சவரனுக்கு ரூ. 43,280க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 100 கிராம் ரூ.7650க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஹூப்ளி - கொச்சுவேலி விரைவு ரயிலில் ஏசி வேலை செய்யாத காரணத்தினால் பய ணிகள் திருப்பூர் ரயில் நிலையம் அருகே அபாய சங்கிலியை இழுத்ததால் ரயில் நின்றது. ஒரு மணி நேரம் ரயில் அதே இடத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், போத்தனூர் ரயில் நிலையத்தில் ஏசி சரி செய்யப்பட்டது.

பிரபல மாயாஜால திரைப்படமான “ஹாரி பாட்டர்” படத்தில் தலைமை பேராசிரியராக நடித்த மைக்கேல் காம்போன் தனது 82 வயதில் வியாழனன்று காலமானார்.

மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்து மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட்டுள்ளேன்.. பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாட காவில் வியாழனன்று முழு அடைப்புக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைப் பகுதியில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.