states

பொது சிவில் சட்டம்: அதிமுக எதிர்ப்பு!

சென்னை,ஜூலை 5- நாடு முழுவதும் பொது சிவில்  சட்டம் கொண்டு வரும் முடிவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் பல்வேறு மதச் சட்டங்கள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு ஒன்றிய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அனைத்து மதத்தைச் சேர்ந்த வர்களுக்கும் திருமணம், விவா கரத்து, தத்தெடுத்தல், சொத்து ரிமை தொடர்பான நாடு முழுமைக் கும் ஒரே சட்டம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு மதங்கள், பிரிவுகள் உள்ள இந்திய நாட்டில் ஒரே சட்டம் என்பது சரியாக இருக்காது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் கூறுகின்றன. இந்நிலையில் பொது சிவில் சட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அதிமுக  பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித்  தலைவருமான எடப்பாடி பழனி சாமி, “2019 ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை தெரிவித் துள்ளோம்” என்று கூறினார். பொது சிவில் சட்டம் சிறுபான் மையினருக்கு எதிரானது, அதை எந்த வடிவிலும் நிறைவேற்றக் கூடாது என்று ஒன்றிய அரசை வலி யுறுத்துவோம் என 2019 நாடாளு மன்றத் தேர்தலையொட்டி அதிமுக  தேர்தல் அறிக்கையில் இடம்பெற் றுள்ளது குறிப்பிடத்தக்கது.