சென்னை, பிப். 6 - கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாண விக்கு இழைக்கப்பட்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. போக்சோ வழக்கை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மனத்தைப் பதைபதைக்க வைக்கும் வன்கொடுமை கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வந்த 8-ஆம் வகுப்புச் சிறுமியை அப்பள்ளியில் பணிபுரி யும் ஆசிரியர்கள் 3 பேர் வெகுநாட்களாக கும்பல் வல்லுறவு செய்துள்ளதும், நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளதும் மனத்தைப் பதைபதைக்க வைக்கிறது. இந்த படுமோசமான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் மூவரும் தப்பித்துவிடக் கூடாது இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்ற வாளிகள் இதுபோன்று வேறு கும்பல் வல்லுறவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளா ர்களா என்பது குறித்து தீர விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும், குற்ற வாளிகள் மூன்று பேரும் தப்பித்து விடாமல் போக்சோ சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள வழக்கை துரிதப்படுத்தி காலம் தாழ்த்தா மல் உரிய தண்டனை பெற்றுத்தரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. ரூ. 25 லட்சம் நிவாரணம்; பள்ளிப் படிப்பை உறுதிசெய்க! மாணவியின் பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், மாணவிக்கு உரிய கவுன்சிலிங் அளித்து அவர் தொடர்ந்து பள்ளிப் படிப்பை தொடர்வதற்கும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பை உறுதிசெய்க! மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு என்.சி.சி. முகாம் என்ற பெய ரில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. தற்போது ஆசிரியர்கள் 3 பேர் வெகு நாட்களாக கும்பல் வல்லுறவு செய்த சம்பவம் வெளிவந்துள்ளது. எனவே, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி களில் படிக்கும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.