ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது: அமைச்சர் அறிவுறுத்தல் சென்னை, செப். 27- தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டத்தில் பண்டிகை காலங்க ளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.