states

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி

சென்னை, அக்.17- இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதாக  கூறப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று  கூறிய காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்  நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது. கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி  சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற நிகழ்ச்சியில்,  இந்து மதம் மற்றும்  இந்து பெண்கள் குறித்து தவறாக பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெ.ெஜ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள் ளார். இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு திங்களன்று (அக். 17) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ேஜாசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி ராசா மீது  நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்துள்ளது என்று தெரி வித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனு தாரர் வேண்டுமானால் கீழமை நீதிமன்றத்தை  அணுக அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டார்.