states

ஏழை விவசாயி பாண்டி மரணம்

சென்னை,பிப்.17- ஏழை விவசாயி பாண்டி மரணத் திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.   இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-  திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை வட்டத்திலுள்ள கன்னி மாநகர் கிராமத்தை சார்ந்த பாண்டி மற்றும் உடன் பிறந்த ஐவருக்கும் 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை சுற்றியுள்ள நிலங்களை சுமார் 100 ஏக்கர் நிலத்தை முன்னாள் காவல்துறை ஐ.ஜி பாலசுப்பிரமணியன் வாங்கியுள்ளார். இதற்கு நடுவில் உள்ள பாண்டி குடும்ப நிலத்தை விலைக்கு கேட்டுள்ளனர். இவர்கள் விற்க மறுத்துவிட்டனர்.

இதனால் முன்னாள் ஐ.ஜி தனது செல்வாக்கை பயன்படுத்தி பாண்டிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.  இதுகுறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பாண்டி புகார் அளித்தார். புகாரை வாங்கிய  அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாண்டி வழக்கு தொடுத்தார்.  இந்நிலையில், முன்னாள் ஐ.ஜியின்  மகன் செந்தில் ராஜ் போஸ்  தூண்டு தலின் பேரில் சங்கர், சின்னக்கருப்பு, நாச்சியப்பன் ஆகிய மூன்று நபர்க ளும் பாண்டி மீது காவல்நிலையத்தில்  தனித்தனியாக பொய் புகார் கொடுத் தனர். அந்த புகாரின் அடிப்படையில் பாண்டி மற்றும் அவரின் சகோதரர்கள் மீது காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு  செய்தனர். மேலும் பாண்டி அவரது சகோதரர்களை கைது செய்து  சிறையிலும் அடைத்தனர். நில மாஃபியா கும்பல்கள், காவல்துறை உயர் அதிகாரி ஆகியோரின் நெருக்கடியால் காவல் நிலையத்திலேயே பாண்டி விசம் குடித்து உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு காரணமான காவல் ஆய்வாளர் மற்றும் பணியிலிருந்த காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். விவசாயி பாண்டி குடும்பத்திற்கு மாநில அரசு  ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாண்டியின் மகனுக்கு அரசு  வேலை வழங்க வேண்டும்.  வேறு சரகத்திற்குட்பட்ட உயர் காவல் அதிகாரிகளை விசாரணை அதிகாரிகளாக நியமித்து நேர்மை யான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும், பாண்டியின் நிலத்தை அபகரிக்கும் நோக்கோடு செயல்பட்ட நபர்கள் அனைவர் மீதும்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாண்டி குடும்பத்தினர் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்கிற இந்த கோரிக்கைகள் மீது மாநில அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.