ராணிப்பேட்டை, நவ. 18 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ராணிப்பேட்டை மாவட்டச் செய லாளராக பி. ரகுபதி தேர்வு செய்யப் பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட முதல் மாநாடு நவம்பர் 16, 17 தேதிகளில் தோழர்கள் என். சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கில் (முத்துக்கடை வெற்றி வேலன் மினி ஹால்) நடைபெற்றது. மறைந்த தோழர்கள் என்.அம்சம்மாள், எம்.ஜோதி நுழைவு வாயில் அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தில் மூத்த உறுப்பினர் டி. சந்திரன் செங்கொடியை ஏற்றி வைத்தார். பொது மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடேசன், தா. வெங்கடேசன், எஸ். செல்வம் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் என். ரமேஷ் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் பி. ரகுபதி வாசித்தார். மாநாட்டைத் துவக்கி வைத்து மாநிலக் குழு உறுப்பினர் ஆ. பாக்கியம் பேசினார். பிரதிநிதிகள் மாநாட்டில் மாவட்ட அமைப்பாளர் என். காசிநாதன் வேலை அறிக்கையையும் வரவு-செலவு அறிக்கையை மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் ஆர். மணிகண்டனும் சமர்ப்பித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் ப.சுந்தர ராசன் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். இறுதியாக ராணிப்பேட்டை நகர செயலாளர் ஜி. குணசேகரன் நன்றி கூறினார். 21 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழுவின் செயலாளர் பி.ரகுபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக என். காசிநாதன், எஸ்.கிட்டு, டி. வெங்க டேசன், ஆ.தவராஜ், ஆர்.மணிகண் டன், ஆர்.திலகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கான போதிய உபகரணங்கள், மருத்து வர்கள் நியமித்து மாவட்ட அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும். பழங்குடி இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை இலவச பட்டா தொகுப்பு வீடுகள் வழங்கவும், காட்டுநாயக்கன் இன மக்களுக்கு எஸ்.டி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். ராணிப்பேட்டை பாலாற்றில் தோல் கழிவு நீர், ரசாயன கழிவு கலந்து மாசடைவதை தமிழ்நாடு அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.