சென்னை, நவ. 18 - மாநில அரசுகளுக்கான 50 சதவிகித வரிப்பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசின் 16-ஆவது நிதிக்குழுவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய மற்றும் மாநில அரசு களுக்கு இடையே நிதியை பகிர்ந்த ளிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் 280-ஆவது பிரிவின் கீழ் மத்திய ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. உயரிய அதிகாரங் களைப் படைத்த இந்த நிதி ஆணையக் குழு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து மாநிலங் களுக்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதனடிப்படையில், 16-வது நிதி ஆணையத்தின் தலைவர் அர விந்த் பனகாரியா தலைமையிலான 12 பேர் குழு நான்கு நாள் பயண மாக ஞாயிற்றுக்கிழமை (நவ.17) தமிழகம் வந்தனர். இந்தக் குழு திங்களன்று (நவ.18) காலை 9.30 மணிக்கு தனியார் நட்சத்திர ஹோட்டலில் முதல்வர், அமைச்சர் கள், அதிகாரிகளுடன் ஆலோச னை நடத்தினர். பின்னர், தொழில் - வர்த்தகத் துறையினர், அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதி நிதிகள், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகளுடன் தனித்தனி யாக ஆலோசனை நடத்தினர். “சுகாதாரம், கல்வி, சமூக நலம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கான பல முக்கியமான திட்டங் களை வடிவமைத்து நடைமுறைப் படுத்துவதற்கான பொறுப்புகளை பெரும்பாலும் மாநில அரசுகள் தான் நிறைவேற்றி வருகின்றன.
ஆனால், அதற்கு மாறாக இந்த பொறுப்புகளை எல்லாம் நிறை வேற்றத் தேவையான வருவாயைப் பெருக்குவதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் குறை வாகவே உள்ளன. அந்தவகை யில், கடந்த 15-வது நிதிக்குழு வின் பரிந்துரைகளின்படி மாநி லங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தியதை நாங்கள் உளமாற பாராட்டுகிறோம். எனினும் இந்த பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வரு வாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. மாநி லங்களுக்கான வரிப் பகிர்வில் இடம்பெற்றிருக்கும் மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகிய வற்றை ஒன்றிய அரசு இக்கால கட்டத்தில் பெருமளவு உயர்த்தி யதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இதுமட்டுமின்றி ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை தொடர்ந்து உயர்ந்து வருவதும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கின்றது. ஒருபுறம் ஒன்றிய அரசிட மிருந்து வரவேண்டிய வரிப் பகிர்வு குறைவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் ஒன்றியஅரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டுமே மாநில அரசுகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்து கின்றன. எனவே, ஒன்றிய வரு வாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையான தாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.