states

மதுரை முக்கிய செய்திகள்

ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை, செப் 15-  மானாமதுரை - மேல கொன்னகுளம், திண்டுக்கல் - அம்பாத்துரை ராஜபாளையம் - சங்கரன் கோவில் மற்றும்  சூடியூர் - பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.  இதன் காரணமாக  இராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை - இராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும்.   மேலும் திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 22 வரை  ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை  கோயம்புத்தூர் - நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். இதே காலத்தில் சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும்.

  இதனால் இந்த மூன்று நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல்படாது. ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில்  ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.   கோவில்பட்டி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்களில்  ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த இரண்டு நாட்களும் பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை சாத்தூர் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

குமாரபுரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 28, 29 ஆகிய இரு தினங்கள் பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.  மேலும் இந்த பணிக்காக, இந்த ரயில்கள் செப்டம்பர் 30 அன்று மதுரை - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு பாலக்காடு செல்லும் ரயில் (16732) மதுரையிலிருந்து மாலை 06.30 மணிக்கு புறப்படும். தென்காசி - செங்கோட்டை இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 30 வரை மதுரையிலிருந்து மாலை 05.15 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை விரைவு ரயில் (06665) மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி - செங்கோட்டை விரைவு ரயில் (06657) ஆகியவை தென்காசி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று மதுரை கோட்ட  ரயில்வே  நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

மானிய விலையில் பாரம்பரிய  நெல் ரகங்கள் வழங்கல்

இராஜபாளையம்,செப்.15- விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் வட்டாரத்தில் அயன் கொல்லங்கொண்டான் கிராமத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ்  விவசாயிகளுக்கு  இராஜபாளையம்  சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் பாரம்பரிய நெல் இரகங்களான சீரக சம்பா மற்றும் சிவப்பு கவனி ஆகிய வற்றை மானிய விலையில் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பத்மாவதி, வேளாண்மை உதவி இயக்குநர் க.திருமலைசாமி,  வேளாண்மை அலுவலர் கு.தனலட்சுமி, துணை வேளாண்மை அலுவலர் ப. மோகன் தாரியா பட்ஐக் மற்றும்  திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

கடமலை-மயிலையிலிருந்து வீரபாண்டி வழியாக  தடையின்றி அரசு பேருந்து இயக்க கோரிக்கை

2 கி.மீ.கல்லூரிக்கு நடந்து செல்லும் மாணவிகள்

கடமலைக்குண்டு, செப்.15- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் இருந்து ஏராளமான மாண விகள் தேனி அருகே வீரபாண்டியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் படித்து வருகின்ற னர். இந்த கல்லூரி மாணவிகளின் வச திக்காக காலை 8.10 மணிக்கு மயிலாடும் பாறையில் இருந்து வீரபாண்டி வழி யாக தேனிக்கும் அதே போல மாலை  3 மணிக்கு தேனியில் இருந்து வீரபாண்டி வழியாக மயிலாடும்பாறைக்கும் அரசு நகரப்பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.  கடமலை-மயிலை ஒன்றியத்தில் இருந்து இந்த வழித்தடத்தின் வழியாக வேறு எந்த அரசு பேருந்து களும்  இயக்கப்படுவதில்லை.  இந்நிலையில் கடந்த சில மாதங்க ளாக வாரத்தில் 3 நாட்கள் வரை வீர பாண்டி வழியாக செல்லும் அரசு பேருந்து நிறுத்தப்படுகிறது. அது போன்ற நாட்களில் கல்லூரி மாணவி கள் வேறு பேருந்துகள் மூலமாக தேனி க்கு சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்தில் வீரபாண்டிக்கு சென்று அதன் பின்பு 2 கிலோமீட்டர் தொலைவு கல்லூரிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.  பேருந்து இயக்கப்படாத நாட்க ளில் மாணவிகள் கல்லூரியை சென்ற டைய மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. இதே போல கல்லூரி முடிந்து கால தாமதமாக வீடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை உள்ளது.  கல்லூரி மாணவிகளின் நலன் கருதி கடமலை-மயிலை ஒன்றியத்தில் இருந்து வீரபாண்டி வழியாக நாள் தோறும் தடையில்லாமல் அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

காலமானார் 

சிவகங்கை,செப்.15- சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில் ஒய்வுபெற்ற ஆசிரியை கமலா காலமானார்.  இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தோழர் மறைந்த சிக்ரி விஞ்ஞானி டாக்டர் ரகுபதியின் மனைவி ஆவார். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தாலுகா செயலாளர் அழகர்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்க பூபதி,கருப்புசாமி மற்றும் பலர் அஞ்சலி செலுத்தி னர்.

காலமானார் 

சிவகங்கை, செப்.15-  சிவகங்கை மாவட்டம் மானா மதுரை அருகே துத்திக்குளம் கிரா மத்தைச் சேர்ந்த வெங்கடேசன் பிள்ளை (வயது 75) என்பவர் காலமானார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத் தின் மாவட்ட பொருளாளரான பாலமுருகனின் தந்தை ஆவார்.  அன்னாரது மறைவுச் செய்தி யறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி ஆட்டோ தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செல்வகுமார் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தி னர்.

மானிய விலையில் பாரம்பரிய  நெல் ரகங்கள் வழங்கல்

இராஜபாளையம்,செப்.15- விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் வட்டாரத்தில் அயன் கொல்லங்கொண்டான் கிராமத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ்  விவசாயிகளுக்கு  இராஜபாளையம்  சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் பாரம்பரிய நெல் இரகங்களான சீரக சம்பா மற்றும் சிவப்பு கவனி ஆகிய வற்றை மானிய விலையில் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பத்மாவதி, வேளாண்மை உதவி இயக்குநர் க.திருமலைசாமி,  வேளாண்மை அலுவலர் கு.தனலட்சுமி, துணை வேளாண்மை அலுவலர் ப. மோகன் தாரியா பட்ஐக் மற்றும்  திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

குண்டர் சட்டத்தில் தந்தை-மகன்  கைது

கடமலைக்குண்டு,செப்.15- தேனி மாவட்டம், மயிலாடும்பாறையை சேர்ந்த வர் தெய்வேந்திரன்(49). இவரது மகன் வைஷ்ணவ் குமார்(22). இருவரையும் கடந்த 8 ஆம் தேதி 5 கிலோ கஞ்சாவுடன் மயிலாடும்பாறை போலீசார் கைது செய்த னர். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த  இருவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ்டோங்கரே, ஆட்சியர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியரின் உத்தர வின்பேரில் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை-மகன் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை : கல்லூரி மாணவன் கைது

தேனி ,செப்.15- பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவனை மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் .    போடி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மகாவிஷ்ணு(21). கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தென்றல் நகரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார். அவரை ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மாணவி மகாவிஷ்ணு வுடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இருந்தபோதும் அவருக்கு தொடர்ந்து மாணவர் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்  புகார் அளித்தார். அதன்பேரில்  போக்சோ சட்டத்தின் கீழ் மகாவிஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போடி அருகே வாகனங்கள்  மோதி 4 பேர் காயம்

தேனி, செப்.15-     போடி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்த வர் போதுராஜ் மனைவி சுப்புலட்சுமி (40). இவர் வியா ழக்கிழமையன்று உசிலம்பட்டி அருகே எழுமலையை சேர்ந்த வாசிமலை மகன் தியா (22) என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் பைக்கில் அணைக்கரைப் பட்டியிலிருந்து மீனாவிலக்கு வந்துள்ளார். அப்போது தேனி ரோட்டிலிருந்து போடி நோக்கி வந்த இரு சக்கர வாகனம் தியா ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுப்புலட்சுமி, தியா ஆகியோர் பலத்த காயம டைந்தனர். இதேபோல் விபத்து ஏற்படுத்திய மோட்டார் பைக்கை ஓட்டி வந்த ரோசனபட்டியை சேர்ந்த காளி முத்து மகன் சப்பாணிமுத்து (31), இவரது வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த கணேசன் மகன் கருப்பசாமி (38) ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். விபத்து குறித்து சுப்புலட்சுமியின் மகன் அருண்குமார் (25) கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல்துறையினர்  சப்பாணிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அழுகிய நிலையில்  இளைஞர் சடலம் மீட்பு

இராஜபாளையம், செப்.15-  ராஜபாளையம் அருகே மில்கிருசுணாபுரம் பிள்ளை யார் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர்பாபு (34) மில் தொழிலாளி. இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அக்கம் பக்கத்தினர் அவரது உறவினர்களு க்கு தகவல் சொல்லியுள்ளனர். பாஸ்கர்பாபுவின் உடன்பிறந்த சகோதரி வந்து அக்கம் பக்கத்தினருடன் வீட்டை திறந்து பார்த்துள்ளனர். அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார். தகவலறிந்த தெற்கு காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக பிணத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசார ணையில் பாஸ்கர்பாபுவிடமிருந்து மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிள்ளைகளுடன் பிரிந்து சென்று விட்டதால் விரக்தியில் இருந்துவந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

தடையில்லா சான்று தராமல் இழுத்தடிப்பு  ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ.90 ஆயிரம் அபராதம்

தேனி ,செப்.15- கடன் தொகை கட்டிய பின்னும், தடையில்லா சான்று வழங்காமல் இழுத்த டித்த ஸ்ரீராம் பைனான்ஸ் நிறு வனத்திற்கு தேனி நுகர் வோர் நீதிமன்றம் ரூ 90 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது .   கம்பம் வடக்கு வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரர். லாரி உரிமையாளர். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தேனியில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவன கிளை யில் ரூ.4 லட்சத்து 75 ஆயி ரம் வாகன கடன் பெற்று லாரி வாங்கினார். அதற்கான தவணை தொகையை வட்டியுடன் முழுமையாக செலுத்தி முடித்தார். அதன் பிறகு வாகன பதிவு சான்றுக் கான தடையில்லா சான்று வழங்கப்படாமல் இருந்தது. அந்த தடையில்லா சான்று கேட்டபோது மேலும் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த னர். அந்த தொகையை செலு த்திய பிறகும் தடையில்லா சான்று கொடுக்காமல் இழுத்தடித்தனர்.  இதையடுத்து தேனியை சேர்ந்த வழக்கறிஞர் செல்வக்குமார் மூலம், தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன் றத்தில் பரமேஸ்வரர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு வில், எதிர்மனுதாரர்களாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவ னத்தின் தேனி கிளை மேலா ளர், கம்பம் கிளை மேலாளர், சென்னை பொது மேலாளர், மும்பை தலைமை அலுவ லக பொது மேலாளர் ஆகி யோரை குறிப்பிட்டார். இந்த மனுவின் மீதான விசா ரணையை தொடர்ந்து நீதி பதி சுந்தர், உறுப்பினர்கள் ரவி, அசீனா ஆகியோர் கொண்ட அமர்வில் வியாழ னன்று தீர்ப்பளிக்கப்பட்டது.  அதன்படி, எதிர்மனு தாரர்களான 4 பேரும் கூட் டாக சேர்ந்து, பரமேஸ்வருக் கான வாகன பதிவு சான்றித ழுக்கான தடையில்லா சான்றை ஒரு மாதத்திற்குள் கொடுக்க வேண்டும். மனு தாரரின் மன உளைச்சல், சேவை குறைபாட்டுக்கு ரூ.90 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.20 ஆயிரமும் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

 

 

 

;