states

தீக்கதிர் விரைவு செய்திகள்

நகர்ப்புற நக்சல்களால் ஆபத்து: மோடி அலறல்

‘நகர்ப்புற நக்சல்கள் புதிய தோற்றத்துடன் மாநிலத்திற்குள் நுழைய முயற்சிக்கின்றனர். அவர்  கள் தங்கள் உடைகளை மாற்றியுள்ளனர். அவர்கள் நம் இளைஞர்களை தவறாக வழிநடத்து கிறார்கள். நம் இளம் தலைமுறையை அழிக்க விடமாட்டோம். நாட்டை அழிக்கும் பணியில் ஈடு பட்டுள்ள நகர்ப்புற நக்சல்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நமது குழந்தைகளை எச்சரிக்க வேண்டும். அவர்கள் அந்நிய சக்திகளின் ஏஜெண்டுகள். அவர்களிடம் குஜராத் தலை குனியாது, குஜராத் அவர்களை அழித்துவிடும்’ என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

சஞ்சய் ராவத்தின் காவல் அக்.17 வரை நீட்டிப்பு!

ஒன்றிய பாஜக அரசையும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் கடு மையாக விமர்சித்து வந்தவர் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத். இவரை, கடந்த ஆகஸ்ட் மாதம்  பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2 மாதமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை அண்மையில், சஞ்சய் ராவத் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதனிடையே,  சஞ்சய் ராவத்தின் காவலை அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமித்ஷா குழுவின் அறிக்கை பேரழிவைத் தரும்!

“ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வு மொழிக் குழுவின் பரிந்துரைகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த செய்தி சரியானது எனில், இது இந்தி மொழி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு சான்றாகும். இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் அமித்ஷா தலைமையிலான குழுவின் இந்த அறிக்கையை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நிரா கரிக்கவே செய்வார்கள். மோடி அரசாங்கத்துக்கும் இந்தி பேசாத மாநிலங்களுக்கும் இடையே யான இந்த மோதல் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவைத் தரும்” என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அயோத்திக்கு இலவச பயணம் : கெஜ்ரிவால் ‘ஐஸ்’

“தில்லி அரசு ராம பக்தர்களுக்காக அயோத்தி வரை இலவச சிறப்பு ரயில் திட்டத்தை நடத்தி  வருகிறது. அயோத்தி சென்று தில்லி திரும்பிய ராம பக்தர்கள் என்னை மனதார ஆசிர் வதிக்கின்றனர். அடுத்தாண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் முழுமையாக தயாராகிவிடும். உங்கள் அனைவருக்கும் ராமரை தரிசிக்க ஆசை இருக்கும். ஆனால் நீங்கள் குடும்பத்துடன் சென்று தங்கி சாப்பிட்டு வந்தால் அதன் செலவு மிக ஜாஸ்தியாக இருக்கும். எனவே, குஜ ராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், நாங்கள் அயோத்திக்கு இலவச தரிசன திட்டத்தை செயல்படுத்துவோம்” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் தொகை குறைவது போதாதாம்!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் மக்கள் தொகை கட்டுப்பாடு பேச்சு குறித்து கருத்து  தெரிவித்த மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரிக்கவில்லை. மாறாக குறைகிறது. ஆணுறைகள் அதிகம் பயன்படுத்துபவர்கள் முஸ்லிம்கள்தான். ஆனால் மோகன் பகவத் இதைப் பற்றியெல்லாம் பேசமாட்டார்...” என்று கூறியிருந்தார். இதற்கு ஹரியானா பாஜக அமைச்சர் அனில் விஜ் பதிலளித்துள்ளார். அதில், “முஸ்லிம்களின் மக்கள் தொகை குறைந்து வருவது நல்லது, ஆனால் இந்த குறைவு போதாது” என தெரிவித்துள்ளார்.

போராடும் அதிகாரத்திற்காக தேர்தலில் போட்டி

“நாட்டின் நிலைமை மோசமாக இருப்பதால் நான் போராட (காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி) விரும்புகிறேன். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகள் பலவீன மடைந்து வருகின்றன. அவற்றை எதிர்த்துப் போராட எனக்கு அதிகாரம் வேண்டும். அத னால்தான் பிரதிநிதிகளின் பரிந்துரையின் பேரில், நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறி யுள்ளார்.

ஜம்முவை சேர்ந்த யாருக்கும் தகுதி இல்லையா?

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக- முதல் முறையாக ஒரு  அரசியல் தலைவர்- மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து, மக்கள் ஜன நாயக கட்சியின் தலைவரும், காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி விமர் சித்துள்ளார். “அவர்கள் (பாஜக) ஜம்முவில் இருந்து ஒருவரை முதல்வராக்குவோம் என்று ஜம்மு  மக்களிடம் கூறினார்கள். பாஜக ஜம்முவில் இருந்து ஒருவரை துணைநிலை ஆளுநர் ஆக்கி யிருக்கலாம். ஆனால் அவர்கள் அதற்கு பதிலாக  உத்தர பிரதேசத்திலிருந்து ஒருவரை ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக்கியுள்ளனர். ஜம்முவில் இருந்து யாரும் துணைநிலை ஆளுநருக்கான தகுதியில் இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி வரிசைக்கு பாஜக தயாராகட்டும்!

“காங்கிரஸ் நாட்டை சிறப்பாக நடத்தி வருகிறது. அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சியில் உள்ளனர்.  அதனால் வாக்காளர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்கலாம். எங்கள் கட்சிக்கு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தின் ஊக்கியாக  நான் இருப்பேன் என்று உணர்கிறேன். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு பாஜக தயாராக இருக்க வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் தெரிவித்துள்ளார்.

மனிதச் சங்கிலியில் ஆதித் தமிழர் கட்சி இணைகிறது

மதுரை, அக்.10-  அக்டோபர் -11 செவ்வாயன்று நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்திற்கு ஆதித்தமிழர் கட்சி - ஆதரவு தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.மற்றும் அதன் சார்பு அமைப்புகள் தொடர்ச்சியாக இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையின் மீது தாக்குதல் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. தமி ழகத்தில் ஏதாவது ஒரு வகையில் கலவரத்தை ஏற்படுத்தி,  சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் இவர்களின் சதித்  திட்டத்தை அம்பலப்படுத்தவும், மதங்களைத் தாண்டி மனித  நேயத்தை வெளிப்படுத்தவும் இடதுசாரி இயக்கங்கள், திரா விட இயக்கங்கள் , தமிழ் தேசிய மற்றும் தலித் இயக்கங்கள்  ஒன்றுபட்டு நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்திற்கு ஆதித்தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்து  அனைத்து மாவட்டங்களிலும் ஆதித்தமிழர் கட்சியின் தோழர்  கள் பெருந்திரளாக மனித சங்கிலியில் பங்கேற்க வேண்டும்  என்று கட்சியின் நிறுவனர் கு.ஜக்கையன் திங்களன்று  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டாலர் 82 ரூபாய் 69 காசுகளானது ரூபாய் மதிப்பு மேலும் சரிவு

புதுதில்லி, அக்.10- அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின்  மாற்று மதிப்பு மீண்டும் சரிந்தது. திங்கட்கிழமை காலை  வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு இணையான மாற்று  மதிப்பு 82 ரூபாய் 69 காசுகள் வரை சரிந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை 82 ரூபாய் 19 காசுகளில் துவங்கி, அதிகபட்சமாக 82 ரூபாய் 43 காசுகள் வரை சென்று, இறுதியாக 82 ரூபாய் 32 காசுகளில் நிலை பெற்றது. அது மேலும் 37 காசுகள் சரிவைக் கண்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும், அமெரிக்க டாலருக்கு இணை யான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 10 சதவிகிதத்திற்கும் அதிகமான சரிவைப் பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக  கடந்த 10 நாட்களில் 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக  சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பின் தொடர் சரிவால் இந்தியாவில் இறக்கு மதிப் பொருட்கள் அனைத்தின் விலையும் கடுமையாக அதி கரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

பட்டாசு வெடிக்கும் நேரம்:  தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, அக்.10- தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி  தினத்தன்று காலை 6 மணி முதல் காலை  7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.  உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை  வெடிக்கக் கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என  தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,  காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்க லாம் என்றும், சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

கலப்பு மணம் புரிந்தவருக்கு  பணிநியமனம் : நீதிமன்றம் உத்தரவு

சென்னை,அக்.10- தாமதமாக சான்றிதழ் சமர்ப்பித்த தற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை  உயர் நீதிமன்றம், திருப்பூரைச் சேர்ந்த  சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட வர்களுக்கு முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 4 வாரங்களில் பணிநியமனம் வழங்க  பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தர விட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவி யாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித் துறை 2015 ஆம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு  நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்வில் பங்கேற்ற திருப்பூரைச் சேர்ந்த இளங்கோ என்பவர், கலப்பு  மணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமை  ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்தார். தேர்வில் 115 மதிப்பெண்கள் பெற்ற  போதும், எஸ்எஸ்எல்சி சான்று மற்றும்  சாதி மறுப்பு மணம் புரிந்து கொண்ட வருக்கான சான்றுகளை சமர்ப்பிக்க வில்லை எனக் கூறி, பணிநியமனத் துக்கு அவர் பெயர் பரிசீலிக்கப்பட வில்லை. பின்னர், அந்த சான்றுகளை சமர்ப்பித்த அவர், ஆய்வக உதவி யாளர் பணி நியமனம் வழங்கக் கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017 ஆம்ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் முன் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி, “சான்றுகளை தாமதமாக சமர்ப்பித்தார் என்பதற்காக பணி வழங்க மறுக்க முடியாது. மனுதாரரை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதால், மனு தாரரை ஆய்வக உதவியாளராக நிய மித்து 4 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க  பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட் டுள்ளார்.

தொலைதூரக் கல்வித்திட்ட தேர்வில் முறைகேடு: சென்னைப் பல்கலையில் 5 பேர் பணியிடை நீக்கம்

சென்னை,அக்.10- கொரோனா காலகட்டத்தில் சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி திட்டத்தில் 1980-81ஆம்  ஆண்டுகளில் நிலுவை (அரியர்) வைத்துள்ள மாணவர்கள் உட்பட அனைவரும் தொலைதூரக் கல்வித்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத பல்கலைக்கழக மானியக்குழு அனுமதித்தது.  இதன்படி 2020ஆம் ஆண்டு மே மாதத்தில், நடந்த தேர்வுகளில்  பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். அதன் முடிவுகள் வெளியானபோது 116 மாணவர்கள் முறை கேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, தேர்வுக்குப் பதிவு செய்யாமலேயே தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்களின் தேர்வு  முடிவுகளை நிறுத்தி வைத்த பல்கலைக்கழகம், பேராசிரி யர் சொக்கலிங்கம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தற்போது பணியில் உள்ள  3பேர் உள்பட ஐந்து பேர் இந்த முறைகேட்டுக்கு துணை போனது தெரியவந்தது. உதவி பதிவாளர் நிலையிலான தமிழ்வாணன், உதவிப்பிரிவு அலுவலர் எழிலரசி, உதவியாளர் ஜான் மற்றும் அண்மையில் ஓய்வுபெற்ற உதவி  பதிவாளர் மோகன் குமார், முன்னாள் பிரிவு அலுவலர் சாந்தகுமார் ஆகிய ஐந்து பேரும் பணியிடை நீக்கம் செய்யப் பட்டு இருப்பதாக துணைவேந்தர் கவுரி தெரிவித்துள்ளார்.

பொதுக் கல்வியைப் பாதுகாப்போம்! உருகுவே மக்கள் வலியுறுத்தல்

மாண்டிவிடியோ, அக்.10- பொதுக்கல்வியைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் உருகுவே நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் பங்கேற்றனர்.  உருகுவேயின் தலைநகர் மாண்டிவிடியோவில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சுமார் 50 ஆயிரம் பேர்  கலந்து கொண்டனர். பேரணிக்கு உருகுவே ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்திருந்தது. ஆனால், பேரணியில் ஆசிரியர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பங்கெடுத்தனர். பொதுக்கல்வி என்பது நாட்டின் மேம்பாட்டிற்கு முக்கியம் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். உருகுவேயின் ஜனாதிபதி லூயிஸ் லகால்லே தலைமையிலான நிர்வாகம் கல்வித்துறைக்கான செலவினங்களைக் குறைத்து வருகிறது. பல்வேறு மட்டங்களில் செய்யப்பட்டுள்ள இந்த செலவுக் குறைப்பால் கல்வித்துறையின் முன்னேற்றம் தடைபடும் சூழல் எழுந்துள்ளது. குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று அரசுப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின்  தலைவர்  ஹெக்டர் கேன்செலா கோரிக்கைவைத்துள்ளார். தேசிய இடைநிலை ஆசிரியர்கள் சங்கக் கூட்ட மைப்பின் தலைவரான எமிலியானோ மாண்டெசென், ‘‘பெரும் அளவில் மக்கள் பேரணியில் பங்கேற்றிருக் கிறார்கள். அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் வர வேண்டும் என்று கோருகிறோம்’’ என்று தெரிவித்தார்.  ஆசிரியர்களின் சம்பளத்தைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத முடிவுகள் புதிய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.



 




 

;