states

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் விமான நிலையம்: அமைச்சர்

சென்னை,அக்.19- சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பரந்தூர்,  ஏகனாபுரம், வளத்தூர், கொடகூர், மேலேரி, நாகப்பட்டு, நெல்வாய் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் விமான நிலையம் அமைகிறது. புதிய விமான நிலையத்துக்காக 4,791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 2,605 ஏக்கர் நஞ்சை  நிலமாகும். இப்பகுதிகளில் உள்ள வர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இங்கு விமான நிலை யம் அமைந்தால், தங்களது வாழ் வாதாரம் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால், இப்பகுதி மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பரந்தூர் விமான  நிலையம் தொடர்பாக தமிழ்நாடு  சட்டப்பேரவையில் புதன்கிழமை (அக்.19) கேள்வி நேரத்திற்கு, சிறப்பு  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி, “சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு செய்து வருகிறது. அங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டால், அதை  சுற்றியிருக்கும் ஏராளமான கிராம மக்களின் வாழ்வாதாரமும், விவசாய  நிலமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.  ஆகவே, அந்த விமான நிலை யத்தை பாதிப்பு இல்லாத வேறு பகுதிக்கு மாற்றலாம். அல்லது அந்த இடத்தில்தான் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தால், அந்த மக்க ளுக்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண் டும். மேலும், அந்த மக்களை அழைத்து  பேசி எந்தவிதமான பாதிப்பும் வராமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”  என்றார்.

தமிழ்நாட்டில் பசுமை வழி விமான நிலையம் என்பது அவசியமானது தான் என்றாலும், விவசாய நிலங்களை தவிர்த்து அரசு புறம்போக்கு நிலங் களில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் அரசு ஆய்வு செய்ய வேண்டும். வீடுகள், நிலங் களை இழக்கும் மக்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்கவும் அரசு  முன்வரவேண்டும் என்று கு.செல்வ பெருந்தகை(காங்.), ஜி.கே.மணி  (பாமக), டி.ராமச்சந்திரன் (சிபிஐ),  தி.வேல்முருகன் உள்ளிட்டோரும் வலியுறுத்தினர்.

பரந்தூர் தேர்வு ஏன்?

இதற்கு பதில் அளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “சென்னை விமான  நிலையம் நாட்டிலேயே 3ஆவது இடத்திலிருந்தது, தற்போது பயணி களை கையாளுவதில் 5ஆவது இடத்  திற்கு தள்ளப்பட்டுள்ளது. சரக்கு களைக் கையாளும் திறனில் சென்னை  விமான நிலையம் தேக்க நிலையில் உள்ளது. அதாவது, 7 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளது. இத னால் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியிலும் மந்த நிலை நீடிக்கி றது. அண்டை மாநிலங்களில் புதிய  விமான நிலையம் இருப்பதால் தான் வளர்ச்சி பெற்று வருகின்றன.  30 ஆண்டுக்கான தேவையை இப்போது நாம் கட்டமைக்க வேண்டி யுள்ளது. 10 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் பரந்தூர்  விமான நிலையம் அமைக்கப்படுகி றது.

தற்போதுள்ள விமான நிலை யத்தை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதால் புதிய விமான  நிலையம் அமைப்பது அவசியம். புதிய விமான நிலையம் அமைப்ப தால் புதிய வழித்தடங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. புதிய விமான நிலையத்திற்காக 11 இடங்களை ஆய்வு செய்த பிறகே பரிந்துரை தேர்வு செய்தோம்.  பரந்தூரில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு சூழலைக் கருத்தில் கொண்டே அங்கு புதிய விமான நிலை யம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற 13 கிராம மக்கள் தங்க ளின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க  நிலத்திற்கு உரிய இழப்பீடு, வாரிசு களுக்கு வேலை வேண்டும் என்று  கோரிக்கைகளை முன்வைத்துள்ள னர். இது குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு வழிக்காட்டி (மார்க்கெட்) மதிப்பைக்  காட்டிலும் 3.4 மடங்கு இழப்பீடு  வழங்கப்படும். நிலம் கொடுக்கும்  வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு,  இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்றாக  புதிதாக வீடுகள் கட்டிக்கொடுக் கப்படும், தேவைப்படுவோருக்கு மாற்று இடமும் வீடுகள் கட்டிக் கொள்ள பணமும் கொடுக்கப்படும். கிராம மக்களின் கோரிக்கை களைப் பரிசீலனை செய்து நடவ டிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதல மைச்சர் உத்தரவிட்டுள்ளார்”என்றார்.
 

;