states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

 1. தமிழ்நாட்டில் அரசு மருத் துவமனைகளில் உள்ள 1,021 உதவி அறுவை  சிகிச்சை நிபுணர்களை நியமிக்க மருத்துவ பணி யாளர்கள் தேர்வுவாரியம் அறிவிப்பு வெளியிட்டுள் ளது. தகுதி உள்ளவர்கள் mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் அதிகளவில் பணிவாய் ப்பு பெறுவதை தவிர்க்கும் வகையில், தமிழ் தேர்வில் 40% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர் ச்சி என தேர்வு விதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
 2. மக்களை அச்சுறுத்து வதற்காக அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, வருவாய் புல னாய்வு இயக்குநரகம் போன்ற அமைப்புகளை பாஜக தவறாகப் பயன் படுத்துகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் மேற் கூறப்பட்ட அமைப்பு களின் சோதனை அதி கரிக்கும் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 3. புதுச்சேரி முத்தியால் பேட்டை தொகுதியின் சுயேட்சை எம்எல்ஏ பிரகாஷ்குமாருக்கு பிரா ன்ஸ் நாட்டில் இருந்து  மிரட்டல் கடிதம் வந்துள் ளது. கடிதத்தில், “பொங்கல் பண்டிகைக் குள் எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடு வோம்” என எழுதப்பட்டி ருந்ததாக போலீசிடம் பிர காஷ்குமார் எம்எல்ஏ புகார் அளித்த நிலை யில், போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.
 4. அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி.உதயகுமாரை அனு மதிக்க வேண்டும் என  சட்டப்பேரவை செய லாளருக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடிதம் எழுதியுள்ளது.
 5. டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 15-ஆம் தேதி முதல் காலி பாட்டில் களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை,  பெரம்பலூர் மாவட்டங் களில் அமல்படுத்த சென் னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 6. தென் ஆப்பிரிக்கா அணிக் கெதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் (தில்லி)  இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்று, ஒருநாள்  தொட ரையும் 2-1 என்ற கணக் கில் கைப்பற்றியது.
 7. சென்னை விமான நிலை யத்தில் மலேசியாவில் இருந்து ஷர்மிளா நாக முத்து என்பவர் எமர் ஜென்சி விளக்குகளில் மறைத்து கொண்டு வந்த 24 காரட் தங்க தகடுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். மொத்தம் 1 கிலோ 808 கிராம் கொண்ட தங்கத்தின் மதிப்பு ரூ.79 லட்சத்தி 44 ஆயிரம் ஆகும்.
 8. தனது 60ஆவது விடுதலை நாளை உகாண்டா கொண்டாடியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்ற விழாவில் பேசிய உகாண்டா ஜனாதிபதி யோவெரி மூஸ்வெனி, “ஏராளமான மூலப் பொருட்கள் உகாண்டாவில் கிடைக்கின்றன. நாங்களே சொந்தமாக பால், உரங்கள் மற்றும் துணி வகைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டோம்” என்றார். இந்த நிகழ்வில் பங்கேற்ற கென்யாவின் ஜனாதிபதி வில்லியம் ரூடோ, “நாங்கள் வறுமையைப் பகிர முடியாது. பட்டினியைப் பகிர முடியாது. ஆனால் வாய்ப்புகளையும், செல்வத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டார்.
 9. உடல் நலன் மற்றும் பொதுவான நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு டென்மார்க் இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஊதியங்களை வழங்குவதில் உள்ள பாலினப் பாகுபாட்டையும் களைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். நவம்பர் 1 அன்று பொதுத் தேர்தல் நடக்கவிருப்பதால், அனைத்துக் கட்சிகளுக்கும் இது குறித்த வேண்டுகோளை சிவப்பு-பச்சை கூட்டணி மற்றும் டேனிஷ் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வைத்துள்ளன.
 10. ஈரானில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வது குறித்து இராக் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தனது தேவையில் சுமார் 45 விழுக்காடு எரிவாயுவை ஈரானில் இருந்துதான் இராக் இறக்குமதி செய்கிறது. இதை மேலும் அதிகரிக்கப் போகிறார்கள். ஆனால், ஏற்கனவே இறக்குமதி செய்ததற்கான பணத்தை செலுத்தாமல் இருப்பதால் ஈரான் தயக்கம் காட்டியது. இந்நிலையில், கடன் தொகையைக் கட்டிவிட்டதால், பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
 11.  

 

;