states

img

புதிய உலகத்தை எதிர்கொள்ளும் திறனுடன் மாணவர்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் பள்ளி நுழைவுத் திருவிழாவில் கேரள முதல்வர் பேச்சு

கொச்சி, ஜுன் 3- புதிய யுகத்தை எதிர் கொள்ளும் திறனுடன் மாணவ-மாணவிகளை உரு வாக்குவதே அரசின் நோக்கம். பொதுக் கல்வித் துறையைப் பாதுகாக்க 2016ஆம் ஆண்டு ‘பொதுக் கல்விப் பாதுகாப்பு இயக் கம்’ தொடங்கப்பட்டது.  இதையெல்லாம் பயன்படுத்தி மாணவர்கள் வாழ்க்கையில் முன்னே றட்டும் என்று முதல்வர் பின ராயி விஜயன் கூறினார்.

எர்ணாகுளம் எலமகரா அரசு மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற மாநில அள விலான நுழைவுத் திருவிழா வை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், நீண்ட விடுமுறைக்குப் பிறகு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகிறார்கள். நண்பர்களைப் பார்த்ததும் விளையாட்டு மைதானம் மற்றும் வகுப்பறைக்கு சென்றதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

ஏற்கனவே பாடப்புத்த கங்கள் மற்றும் சீருடைகள் கிடைத்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. அப்படிப் பார்த்தால் பல மகிழ்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கிறீர்கள்.

பொதுக்கல்வி பாதுகாப்பு இயக்கம்

பள்ளிகள் குழந்தை களுக்காக பல்வேறு ஏற்பாடு களைச் செய்துள்ளன. வகுப்பறைகள் உயர் தொழில் நுட்பம் கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளன. ரோபோ டிக் கருவிகள் உள்ளன. பொதுக் கல்வித் துறையில் நமது குழந்தைகளின் கல்வி க்கு முக்கியத்துவம் அளிப்ப தற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். புதிய யுகத்தை எதிர் கொள்ளும் திறனுடன் குழந் தைகளை உருவாக்குவதே அரசின் நோக்கம். பொதுக் கல்வித் துறையைப் பாது காக்க 2016 ஆம் ஆண்டு ‘பொதுக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்’ தொடங்கப்பட் டது. இது பொதுக் கல்வித் துறையில் தீவிர மாற்றங் களைக் கொண்டு வந்தது.

குழந்தைகளின் கல்வி சமூகப் பொறுப்பாக மாறி விட்டது. தேர்வு நடத்துதல் உட்பட பொதுச் சமூகம் பொறுப்பேற்றதை கோவிட் காலத்தில் காண முடிந்தது. மேலும், நிதி ஆயோக் அறிக்கையில் கேரளாவின் கல்வித் தரம் முதலிடத்தில் உள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

விழாவுக்கு பொதுக் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் ராஜீவ் கல்வி நாட்காட்டியை வெளி யிட்டார். மேயர் எம்.அனில் குமார், பொதுக் கல்வித் துறை முதன்மைச் செயலர் ராணி ஜார்ஜ், இயக்குநர் எஸ். ஷாநவாஸ் உள்ளிட்டோர் பேசினர்.
 

;