states

img

கேரள வங்கியின் முதல் வாரியம் பதவியேற்றது.... முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பு

திருவனந்தபுரம்:
கேரள வங்கி தனது முதல் பிறந்தநாளை ஞாயிறன்று (நவ.29) கொண்டாடும் நிலையில் முதலாவது வாரிய உறுப்பினர்கள் வெள்ளியன்று பதவியேற்றனர். முதல்வர் பினராயி விஜயன், நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், கூட்டுறவு அமைச்சர் கடகம்பள்ளிசுரேந்திரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். 

13 மாவட்ட கூட்டுறவு வங்கிகளை மாநில கூட்டுறவு வங்கியில் இணைத்து2019 நவம்பர் 29 அன்று கேரள வங்கிஉருவாக்கப்பட்டது. ஜனவரி 20 அன்றுவங்கியின் முதல் பொதுக்குழுகூட்டம் நடந்தது. அதில் விதிகள், பார்வை மற்றும் பணி ஆவணங்களில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்தது. புதிய‘கேரளா வங்கி’ மற்றும் லோகோவிற் கும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது.

முதலிடம் பெற முயற்சி
முதல் ஆண்டு செயல்பாட்டு அறிக்கை,கேரளாவில் ஸ்டேட் வங்கியை மிஞ்சும்முதல் வங்கியாக மாறுவது என்ற இலக்கை விரைவாக அடைய முடியும்என்ற நம்பிக்கையை அளிக்கிறது. வங்கி மொத்தம் ரூ.3 லட்சம் கோடிவணிகத்தை இலக்காகக் கொண்டுள் ளது. 769 கிளைகளுடன், வணிக வங்கிவெறும் நான்கு மாதங்களில் ரூ.1 லட்சம்கோடியைப் பெற்றது. இதில் ரூ.62,000 கோடி முதலீடு. 40,000 கோடி கடன். லாபம் ரூ.374.75 கோடி. இதில் ஏழு பகுதி அலுவலகங்கள், மாவட்ட மையங்களில் 13 கடன் விநியோக மையங்கள், திருவனந்தபுரத்தில் ஒரு தலைமையகம், எர்ணாகுளத்தில் ஒருநிறுவன வணிக அலுவலகம், மண் விளையில் ஒரு நவீன பயிற்சி மையம் மற்றும் நான்கு ஆரம்ப கூட்டுறவு சங்கமேம்பாட்டு அலகுகள் உள்ளன.

மலப்புறத்திற்கு பெரும் இழப்பு
கேரள வங்கியின் பொதுவான பார்வையில் இருந்து விலகி இருக்க மலப்புறம் மாவட்ட கூட்டுறவு வங்கிஎடுத்த முடிவு அம்மாவட்ட கூட்டுறவுநிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. நவீன வங்கி வசதிகள் மற்றும்ஏடிஎம் நெட்வொர்க் சேவைகள் ஆகியவை முக்கிய இழப்புக்கள். கோவிட்காலத்தில் வட்டி இல்லாத கடன், தங்கக்கடன் திட்டம், எம்.எஸ்.எம்.இ சுவிதா,சுவிதா வீட்டுக் கடன் திட்டம் மற்றும் பிறஉதவிகள் மலப்புறத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு கிடைக்காது.

பதவியேற்பு
கேரள வங்கியின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரியம் வெள்ளிக்கிழமைபதவியேற்றது. வங்கியின் தலைமையகத்தில் கோவிட் விதிமுறைகளின்படி  நடந்த இந்த விழாவில் முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் டி.எம்தாமஸ் ஐசக், கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 14 உறுப்பினர்கள் பொறுப்பேற்றார்கள். வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கோபிகோட்ட முறிக்கல், துணை தலைவர்எம்.கே.கண்ணன் மற்றும் இயக்குநர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.விழாவில், வங்கியின் இயக்குநர் குழுவின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களான கூட்டுறவு செயலாளர் மினிஆண்டனி, நபார்டு வங்கியின் கேரளமண்டல பொதுமேலாளர் பி.பாலச் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  குழுவில் உள்ள இரண்டு சுயேச்சையான தொழில்முறை இயக்குநர்களில்ஒருவரை அரசாங்கம் பரிந்துரைத் துள்ளது. அதன்படி பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி நிர்வாக முன்னாள் இயக்குநர் எஸ்.ஹரிஷங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருவர் பின்னர் பரிந்துரைக்கப் படுவார்.