திருவனந்தபுரம், டிச.01- விழிஞ்ஞத்தில் எந்த வித கலவரத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரி வித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விழிஞ்ஞம் துறைமுகத்தை கட்டி முடிக்க வேண்டும் என்பது அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவு. போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போ தும் தயாராக உள்ளது. ஏற்கனவே நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. 80 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதைத் தவிர அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளன. மீனவர்களின் அனை த்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன. ஆனாலும், சிலரது போராட்டம்ஏன் தொடர்கிறது என்பதை கண்டறிய வேண்டும். காவல் நிலையத்தை எரிக்கப் போவதாக சமர சமிதி (போராட்டக்குழு) பிரமுகர் அறிவித்த குரல் பதிவுகள் வெளியாகியுள்ளன. விழிஞ்ஞத்தில் வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்பட்டது. காவல் நிலையத்தையும் காவ லர்களையும் தாக்கியவர்கள், அவர்களை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவிடாமலும் தடுத்துள்ளனர். கலவர முயற்சியில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை ஊடகங் கள் ஆய்வு செய்து கண்டறிய வேண்டும். விழிஞ்ஞம் கலவர பூமியாக மாறாமல் தடுக்க காவல்துறை காட்டிய சுயக்கட்டுப்பாட்டை பாராட்டினால் போதும். கேரளாவை வகுப்புவாத கலவரத்தில் மூழ்கடித்து விடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.