திருவனந்தபுரம், டிச.23- அதிகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் 18 அத்தியாவ சியப் பொருட்களை தொகுப்பாக வழங்க கேரளம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை, கேரள முதல்வர் பின ராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள் ளார். ‘தமிழகத்திற்கு உதவி’ என்ற தலைப்பில், அந்த முக நூல் வேண்டுகோளில் பினராயி விஜயன் குறிப்பிட்டிருப்பதாவது:
“தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரளம் தயாராகி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தொகுப்பாக வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை அரிசி - 5 கிலோ, துவரம் பருப்பு, உப்பு, சர்க்கரை, கோதுமை மாவு தலா 1 கிலோ, ரவை - 500 கிராம், மிளகாய்ப்பொடி - 300 கிராம், சாம்பார் பொடி - 200 கிராம், மஞ்சள் பொடி, ரசப் பொடி, தலா 100 கிராம், பக்கெட் (வாளி), கப், சோப்பு, பற்பசை, சீப்பு, லுங்கி, நைட்டி, துண்டு தலா ஒன்று, பல் துலக்கி - 4, சூரியகாந்தி எண்ணெய் - 1 லிட்டர் ஆகி யவை இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த உதவி யை விரைவாக வழங்குவதற்கு கேரள மக்கள் இவற்றை ஒரு தொகுப்பாக அனுப்பி வைப்பது பொருத்தமாக இருக்கும் என கருதப்படுகிறது. மேற்கண்ட பொருட்கள் திருவனந்த புரம் கனகக்குன் அரண்மனை எதிரே உள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இம்முயற்சியில் அனைவரும் கலந்து கொண்டு சக மனிதர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கி றோம்.” இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.