திருவனந்தபுரம், மே 14- கேரளத்தில் மழை எச்சரிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மே 14 செவ்வாயன்று இரண்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழை என்றால் 24 மணி நேரத்தில் 115.6 மிமீ முதல் 204.4 மிமீ வரை மழை பெய்யும். திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பொது மக்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்கள்
அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் இடம்பெயர வேண்டிய இடங்களில் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். பல்வேறு கரையோரங்களில் புயல் காற்றின் வேகம் வலுவாக இருக்கும் என்பதால், அபாய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையான கட்டத்தில், இடம்பெயர வேண்டும். மீன்பிடி நிலைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் பலவீனமான கூரைகளைக் கொண்ட வீடுகளில் வசிப்பவர்கள் வரும் நாட்களில் எச்சரிக்கையின் அடிப்படையில் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும்.
தனியார் மற்றும் பொது இடங்களில் ஆபத்தில் நிற்கும் மரங்கள் /கம்பங்கள் / விளம்பர பலகைகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு ஆபத்தான மரங்களை வெட்ட வேண்டும். ஆபத்தான நிலைமைகள் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நிவாரண முகாம்களுக்கு மாற்றப்படும் கட்டங்களில், அவர்கள் கோவிட் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும். பேரிடர் ஏற்படும் பகுதிகளில் உள்ளவர்கள் அவசர சிகிச்சைப் பெட்டியை உடனடியாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிட் தயாரிப்பதற்கான வழிமுறைகள் https://sdma.kerala.gov.in/.../2020/07/Emergency-Kit.pdf என்கிற தளத்தில் உள்ளன.
கனமழை பெய்தால், குளிப்பதற்கும், மீன்பிடிப்பதற்கும் அல்லது பிற நோக்கங்களுக்காகவும், எந்த சூழ்நிலையிலும், நதிகளைக் கடக்கவோ, ஆறுகள் அல்லது பிற நீர்நிலைகளுக்குள் நுழையவோ கூடாது. நீர்நிலைகளுக்கு மேல் உள்ள மேம்பாலங்களில் பார்ப்பது, செல்ஃபி எடுப்பது அல்லது ஒன்றுகூடுவது அனுமதிக்கப்படாது. அணைகளின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்கள், அணைகளில் இருந்து தண்ணீர் நிரம்பி வழியும் சாத்தியக்கூறுகளை முன்னறிவித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, தேவைப்பட்டால் வெளியேற்றப்படுவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
மலைப்பாங்கான பகுதிகளுக்கு இரவு நேர பயணத்தை முற்றிலும் தவிர்க்கவும். மேலும் காற்றில் மரங்கள் சாய்ந்து விழும் நிலையிலும், மின் கம்பங்கள் சரிந்து விழும் அபாயம் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பலத்த காற்று வீசும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் https://sdma.kerala.gov.in/windwarning/ என்கிற இணைதளத்தில் வெளியிட்டுள்ளது.
கடல் சீற்றம் எச்சரிக்கை
கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டியுள்ள மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் பலத்த காற்று மற்றும் மோசமான வானிலைக்கு வாய்ப்புள்ளது. கடல் சீற்றம் வலுப்பெற வாய்ப்புள்ளதால், அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, அபாயப் பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும். மீன்பிடி கப்பல்களை (படகுகள், வள்ளங்கள் போன்றவை) துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும். படகுகளுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் மோதல் அபாயத்தை தவிர்க்கலாம். மீன்பிடி உபகரணங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கடற்கரைக்கு பயணங்கள் மற்றும் கடலில் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.