states

img

கேரள அரசுக்கு எதிரான உணர்வை துண்டிவிடும் ஆளுநரின் கடிதம்

திருவனந்தபுரம், டிச.12- பல்கலைக்கழகங்கள் தொடர் பாக முதல்வர் பினராயி விஜய னுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட் டுள்ள குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சி களின் சீர்குலைவு நடவடிக்கையை முடுக்கிவிட்டதாக சந்தேகிக்கப்படு கிறது. குற்றச்சாட்டுகள் மற்றும் தவ றான தகவல்களை யுடிஎப் மற்றும் பாஜகவினர் ஆயுதமாகப் பயன் படுத்தும் வாய்ப்பாக அமைந்துள் ளது. ‘அரசியல் தலையீட்டை பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று கண்ணூர் பல்கலைக் கழக துணைவேந்தர் மறு நியமனம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிரான விவாதம் கிளப்பப்பட்டி ருக்கிறது. வெள்ளியன்று அமைச்சர் கே.என்.பாலகோபால், தலைமைச்  செயலர் வி.பி.ஜாய் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று விளக்கம் அளித்தனர். ஆளுநருக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், நல்லெண்ண அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெளிவுபடுத்தினர்.

அதைத் தொடர்ந்து ஆளுநரிடமிருந்து அந்தக் கடிதம் வெளிவந்தது. சனி யன்று காலை தில்லிக்கு ஆளுநர் புறப்பட்டார். வேந்தர் என்ற முறையில் ஆளு நர் பல்கலைக்கழக விவகாரங்க ளில் விளக்கம் கேட்பது வழக்கம். புகார்களுக்கு அரசு மற்றும் பல்க லைக்கழகங்களிடமிருந்து பதில் தேவைப்படும். பெரும்பாலானவை பயனற்றவை என்று ஒதுக்கித் தள் ளுவது வழக்கம். இம்முறை ராஜ்  பவனில் இருந்து வந்திருப்பது வேறு பட்ட நடவடிக்கை. பல்கலைக்கழக வேந்தர் பதவியை முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்ற குறிப்பு வரம்பு மீறியதாக சட்ட வல்லு நர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆத்திரமூட்டலுக்கான சூழ்நிலை அரசு தரப்பிலிருந்து இல்லாததால் ஆளுநரின் நடவடிக்கை கேள்விக் குறியாகி உள்ளது. அரசுக்கு எதிரான நிலைப் பாட்டை எடுக்குமாறு பாஜக மாநி லத் தலைவர்கள் ஆளுநரிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதில் ஒன்றிய அமைச்சர் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். துணை வேந்தர் நியமனத்தில் பாஜக தலை வர்களும் பரிசீலனைக்கு பெயர் களை பரிந்துரை செய்தனர். அவை பரிசீலிக்கப்படாததும் ஆளுநரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. சமஸ்கிருதப் பல்கலைக்கழ கத்தில் துணைவேந்தர் பதவிக்கு, யுஜிசி பிரதிநிதியை உள்ளடக்கிய தேடல் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிடுவதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதே உண்மை. பல்கலைக்கழக சட்டத் தின் படி ஒருவரின் பெயர் மட்டுமே தேவை என உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. கலா மண்டலம் துணைவேந்தர் அரசின் அனுமதி பெறாமல் ஆளுநர் மீது வழக்கு தொடர்ந்தார். ஆளுநர் கூறும் குற்றச்சாட்டுகள் எதிலும் அரசு எதிர் நிலையில் இல்லை. ஆனாலும், அரசியல் தலையீடு என்கிற நிலைப்பாட்டின் பின்னால் வேறு காரணங்கள் உள்ளன என் பது தெளிவாகிறது. இது உயர் கல்விக்கு பின்னடைவை ஏற்படுத் தும் என கல்வியாளர்கள் தெரி வித்துள்ளனர்.

;