states

img

ஒடிசா ரயில் விபத்து: தவறான சிக்னல் கொடுத்ததால் ஏற்பட்டது - ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிக்கை

தவறான சிக்னல் கொடுத்ததால் தான், ஒடிசாவில் ரயில்கள் விபத்துக்குள்ளானது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட கோர விபத்தில், 292 பேர் உயிரிழந்தனர். ஆயிரம் கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், சிக்னல் இணைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின்போது  குறைபாடுகள் நிகழ்ந்ததாகவும், சிக்னல் மற்றும் தகவல்தொடர்பு துறையின் பல்வேறு நிலைகளில் தவறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், ரயில் பாதை மேற்பார்வையாளர்கள் குழு அளவிலும் மேற்கொள்ள வேண்டிய பணியில் தவறுகள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;