states

img

பாஜக ஆளும் உ.பி.யில் 16,000 போலி உரிம துப்பாக்கிகள்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2024 மக்கள வைத் தேர்தலுக்கான பாது காப்பு நடவடிக்கை யாக உரிமத்துடன் துப்பாக்கி வைத்தி ருப்பவர்களின் முக வரிகளைச் சோத னையிடும்பணி தேர்தல் ஆணை யத்தால் நடத்தப்  பட்டு வருகிறது. 

இந்தச் சோதனையில் கோரக்பூரில் கைப்பற்றப்பட்ட 21,624 துப்பாக்கி உரி மையாளர்களில் 16,162 பேர் பதிவு  செய்யப்பட்ட முகவரிகளில் இல்லாத தும், அதில் 7,955 துப்பாக்கி உரிமையா ளர்களைத் தொடர்பு கொள்ள முடி யாத நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்  கப்பட்டுள்ளது. ஒரே ஒரு மண்டலத்தில் 16,000-க்கும் அதிகமான அளவில் துப்பாக்கி உரிமங்கள் போலி முகவரி மூலம் பெறப்பட்டுள்ளது எனவும், மாநி லம் முழுவதும் நடத்தப்படும் சோதனை முடிவு லட்சக்கணக்கில் இருக்கும் என வும் தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களவைத் தேர்தலை அமைதி யான முறையில் நடத்த அனைத்து துப்  பாக்கி உரிமையாளர்களையும் கண்டு பிடித்து அவர்களது புதிய முகவரிகளை  உரிமத்தில் இணைக்க காவல்துறைக்கு  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.