states

img

ஆந்திராவில் தேர்தல் முடிந்தும் வன்முறை

தென்னிந்திய மாநிலங்களில் ஒன் றான ஆந்திராவில் உள்ள 175  சட்டமன்ற மற்றும் 25 மக்களவை  தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக திங்க ளன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்  னெப்போதும் இல்லாத வகையில் திரி ணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க  மாநிலத்தைப் போன்று ஆந்திராவிலும் வாக்குப்பதிவு நாளில் மிக மோசமான அள வில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் அரங்  கேறின. 8க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தெலுங்கு தேச தொண்டர்கள் ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொண்டு  வன்முறையில் ஈடுபட்டனர். இருதரப்பி லும் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காய மடைந்த நிலையில், வாக்குப்பதிவு நிறைவு  பெற்ற பின்பும் ஆந்திராவில் வன்முறை மீண்டும் தலை தூக்கியுள்ளது.

மீண்டும் தலை தூக்கியுள்ளது. திருப்பதியில் பதற்றம்

திருப்பதி மக்களவை மற்றும் சட்ட மன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  இயந்திரங்கள் அங்குள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. செவ்வா யன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்  திருந்த அறையை சந்திரகிரி சட்டமன்ற தொகுதி தெலுங்கு தேச வேட்பாளர் புலி வர்த்தி நானி பார்வையிட சென்றார். அப்  பொழுது பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர், புலிவர்த்தி நானி சென்ற கார்  மீது இரும்பு ராடு, மரக்கட்டைகளை வைத்து தாக்குதல் நடத்தினர். தெலுங்கு  தேச கட்சியினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்த பல்கலைக்கழக வளாகம் வன் முறை பூமியாக மாறியது. மேலும் அங்கு  நின்று கொண்டு இருந்த இருசக்கர வாக னங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. தக வலறிந்த போலீசார் வன்முறையை கட்டுப்  படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால்  சுட்டும், தடியடி நடத்தியும்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேச தொண்டர் களை விரட்டியடித்தனர். இந்த வன்முறை  சம்பவத்தால் திருப்பதி பகுதியில் 144 தடைக்கு நிகராக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாஜக - தெலுங்குதேசம் கூட்டணி கட்சிகள் தான் வன்முறைக்கு காரணம்

ஆந்திர தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது மாநில முதல்வரும்,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் மீது  பாஜக - தெலுங்கு தேசம் - ஜனசேனா  கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தி னர். இந்த தாக்குதலில் முதல்வர் ஜெகன் மோகனின் தலையில் காயம் ஏற்பட்டது. இதன் விளைவாகவே  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் திங்களன்று நடைபெற்ற தேர்தலின் பொழுதும், தற்போதும் தெலுங்கு தேசம் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி  வருகின்றனர். வன்முறைக்கு பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகள் தான் துவக்கப் புள்ளி ஆகும்.
 

;