science

img

வண்டுகளிடம் கற்ற சிகிச்சை முறை ! 

மூளையில் ரத்தக் கசிவு போன்றவை ஏற்பட்டால் , அதை அடைத்துப் பிற பகுதிகளில் பாதிக்கப்படாமல் செய்வது அவசியம்.  இதற்கு, மூளையின் நெளிவு சுளிவான பகுதிகளுக்குள் துல்லியமாகக் குழாய்களைச் செலுத்தி, அக்குழாய்களின் வழியே துளையை அடைக்கும் பிளாட்டினம் கம்பிகளை அனுப்பிப் பொருத்துவர்.ஆனால், மூளையின் சில சிக்கலான பகுதிகளில் இந்த சிகிச்சை முறை சாத்தியமாவதில்லை. 

இந்தக் குறையைப் போக்க, இயற்கை படைத்த வண்டுகளின் உதவியை நாடினர், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். 

அதன்படி , வண்டுகளின் கால் அமைப்பு இயங்கும் விதத்தைக் கவனித்து, அதுபோலவே ரோபோ கம்பிகளை வடிவமைத்தனர் . அதை மூளையின் நெளிவுகளுக்குள் விரும்பியபடி செலுத்தி, சிக்கலான இடத்திலும் கூட சிகிச்சை அளிக்கமுடியும் என்று உறுதியளித்தனர். 

மேலும், பன்றியின் மூளையில் இந்த கண்டுபிடிப்பைச் சோதித்தபோது, பல சிக்கலான சிகிச்சை முறைகளையும் மருத்துவர்கள் வெற்றிகரமாகச் செய்ததாகத் தெரிவித்தனர். இந்த சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்தால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டோர் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டோர் பெரிதும் பயனடைவர் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

 

 

 

 

;