science

img

லேண்டர் இருப்பிடம் கண்டுபிடிப்பு

இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

“சந்திரயான் 2 திட்டம் முழுமையாக  தோல்வி அடையவில்லை. நாம் வெற்றிக்கு மிக அருகில் சென்றிருக்கிறோம்.  விரைவில் லேண்டருடன் தகவல் தொடர்பு மீட்கப்படும் என்று நம்புகிறோம்”

பெங்களூரு,செப்.8- நிலவில் தரை இறக்கும் முயற்சியின் போது, கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சுற்றுக் கலன், லேண்டர், ஆய்வூர்தி ஆகிய மூன்று  பாகங்களைக் கொண்ட சந்திரயான்- 2 விண்கலத்தை ஜூலை 22 அன்று ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவியது. நிலவின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்த பிறகு, பிரக்யான் ஆய்வூர்தியுடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிக்கப் பட்டது. விக்ரம் லேண்டர் நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர, மறுபுறம் ஆர்பிட்டர் எனப் படும் சுற்றுக்கலன், குறைந்தபட்ச மாக 100 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த சுற்றுப் பாதையில் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  நிலவில் இருந்து 2 கிலோ மீட்டர்  உயரத்தை விக்ரம்  லேண்டர் அடைந்த போது, இஸ்ரோ  கட்டுப்பாட்டு மையத்துடனான தொட ர்பை  இழந்தது. ஆர்பிட்டர் மூலமாக, விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், விக்ரம் லேண்டரின் இருப்பிடம் தொடர்பான தெர்மல் இமேஜ் புகைப்படத்தை, ஆர்பிட்டர் அனுப்பியுள்ளதாகவும் ஆனால் லேண்டர் உடன் இன்னும் தகவல் தொடர்பு கிடைக்கவில்லை என்றும் இஸ்ரோ தலைவர்  சிவன் கூறியுள்ளார். லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும், விரைவில் தகவல் தொடர்பு மீட்டமைக்கப்படும் என்றும் சிவன் நம்பிக்கை தெரி வித்துள்ளார். முன்னதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியிடம் பேசிய சிவன், “சந்திரயான் 2 திட்டம் முழுமையாக தோல்வி அடையவில்லை. நாம்  வெற்றிக்கு மிக அருகில் சென்றிருக் கிறோம்,” என்று தெரிவித்தார்.  மேலும், அடுத்த 14 நாட்களில் ( இது நிலவின் ஒரு நாள்) விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்வோம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

சந்திரயான் 2 திட்டம் இரு விஷயங் களை உள்ளடக்கியது. ஒன்று அறி வியல், மற்றொன்று தொழில்நுட்ப செயல்பாடு. ஆர்பிட்டர் என்பது அறிவியல் சார்ந்தது. லேண்டரின் தரையிறக்கம் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் தொழில்நுட்ப செயல்பாட்டை சார்ந்தது. இதற்கு முன்பு இந்தியா அனுப்பிய ஆர்பிட்டர்களைவிட இத்திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் வித்தியாசமானது. இது நமக்கு அதிகப்படியான தகவல் களை அளிக்கும். இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், “சந்திரயான் 2 திட்டம் மிகவும் நுட்ப மான பணித்திட்டம். இதற்கு முன் இஸ்ரோ முன்னெடுத்த திட்டங் களுடன் ஒப்பிடும்போது, இது ஒரு  பெரிய படிக்கல். ஜூலை 22, 2019ல் சந்திரயான் 2 ஏவப்பட்டதில் இருந்து இந்தியா மட்டுமல்ல, இந்த உலகமே ஆர்வத்துடனும் பெரிய எதிர்பார்ப்பு களுடனும், இதன் முன்னேற்றத்தை கூர்ந்து கவனித்து வந்தது. இது  நிலவின் ஒரு பகுதியை மட்டுமல்ல, மொத்த நிலவையும் ஆராய்வ தற்கான நோக்கம் கொண்ட வித்தியாசமான திட்டம் இது. சரியான சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கும் ஆர்பிட்டர், நிலவில் ஏற்படும் மாற்றங்கள், துருவங்களில் நீர் மற்றும் கனிமங்கள் எங்கு இருக்கிறது என்பது குறித்து நாம்  அதிகம் புரிந்து கொள்ள உதவும். இத்திட்டம் 90-95 சதவீதம் வெற்றி  பெற்றுள்ளது,” என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

;