science

img

சந்திராயன் 2 நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் தேதி அறிவிப்பு

சந்திரயான் 2 விண்கலம், வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான் 2 செயற்கைக்கோள், கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  சந்திரயான் 2 செயற்கைக்கோளை கொண்டு சென்ற ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்து, மூன்றாவது நிலையில் பொருத்தப்பட்டு இருக்கும் என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைக்கோளை, இன்று (24-07-2019) பிற்பகல் 2.52 மணிக்கு பூமியின் சுற்று வட்டப்பாதையில் (241.5 x 45162) நிலைநிறுத்தியது.

இதை அடுத்து, வரும் 26-ஆம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு (262.9 x 54848) வந்தடையும். இதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி பயணிக்கும். இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
 

;