வேலூர், அக்.6- சந்திரயான் - 2 திட்டத்தில் விக்ரம் லேண்டருடனான தொடர்பு கடைசி நேரத்தில் துண்டிக்கப் பட்டதற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணா துரை கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்று கள் நடும் பணியை மயில்சாமி அண்ணாதுரை மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண் முகசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் ஆற்காடு அருகே விளாப்பாக்கத்தில் அமைந் துள்ள மகாலட்சுமி கலை மற் றும் அறிவியல் கல்லூரியில் நடை பெற்ற அறிவியல் கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மயில்சாமி அண்ணாதுரை, மாணவர்களிடையே உரை யாற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நிலவைச்சுற்றி சந்திரயான் 2 - ஆர்பிட்டர் ஏற்கெ னவே இருப்பதால், விக்ரம் லேண்டர் போன்ற ஒன்றை மீண் டும் உருவாக்கி நிலவுக்கு அனுப்பலாம் எனத் தெரிவித்தார். அதே நேரம் புதிதாக அனுப் பப்படும் கருவியில் புதிய மாற் றங்கள் செய்யப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.