science

img

புதிய இரத்த பரிசோதனையில் 20 வகையான புற்று நோய்கள் கண்டறிய படலாம்!

புதிய வகை இரத்த பரிசோதனையின் மூலம் 20 வகையான புற்றுநோய்களை துல்லியமாக கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கிரெயில் இன்க் என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம் இந்த புதிய இரத்த பரிசோதனையை உருவாக்கியுள்ளது. இதில் மரபணுக்கள் செயலில் உள்ளதா அல்லது செயலற்று உள்ளதா என்பதை கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய 3600 இரத்த மாதிரிகள் இந்த பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பரிசோதனையின் மூலம் ஆரம்பக்கட்டத்தில் உள்ள பொதுவான புற்றுநோய்களின் குறைந்தபட்ச சதவீதத்தை கண்டறிய முடியும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதனால் பல நோயாளிகளுக்கு சிறந்த தரமான சிகிச்சையை கொடுக்க பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.