நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ பரப்பளவில் புதிய பள்ளத்தை சந்திரயானின் பிரக்யான் ரோவர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சந்திரயான் -3 செயற்கைக் கோள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகிறது.பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் பெரிய பள்ளம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.
இந்தப் பள்ளம் 160 கி.மீ பரப்பளவில் இருப்பதாகவும், பிரக்யான் ரோவர் தரையிறங்கிய இடத்திற்கு அருகில் இது இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்த தகவல்கள் அகமாதாபாத்தில் உள்ள ஆய்வகத்தின் விஞ்ஞானிகளால் சயின்ஸ் டைரக்ட் பத்திரிகையின் சமிபத்திய பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
பிரக்யான் ரோவர் எடுத்தப் புகைப்படங்களின் மூலம் பள்ளத்தாக்கின் அமைப்பு தெளிவாகத் தெரிவதாகவும், இது நிலவின் புவியியல் வரலாறு குறித்த முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவும் என்றும் கூறப்படுகிறது.