science

img

அறிவியல் கதிர்

♦ ஜாம்பி பூஞ்சைக் காளான்கள்

 பெரு நாட்டில் ஆய்வு மேற்கொண்டி ருக்கும்போது ஈயின் உடலிலி ருந்து பூஞ்சைக் காளான்களின் கிளைகள் வெடித்து வெளியே வருவதை பரிணாம உயிரியலாளரும் சுற்றுசூழல் பாது காப்பு புகைப்பட நிபுணருமான ராபர்டோ கார்சியா ரோ (Roberto Garba Roa) பட மெடுத்துள்ளார். இந்தப் பூஞ்சை ஈயின் மேல்கூட்டில் துளைத்து தங்கிக்கொண்டு அதன் சிந்தனையையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதாம். இதன் மூலம் தனக்கு சாதகமான இடத்திற்கு ஈயை இடம் பெயர வைத்துள்ளது. அதன் உடலிலிருந்து வெடித்து வெளியே வருவதால் ஈ இறந்துவிடுகிறது. பின் பூஞ்சை வேறு ஓம்பியை தேடுகிறது. இப்படிப்பட்ட பூஞ்சைகள் பூச்சிகளின் உடலில் ஒட்டுண்ணிகளாக செயல்பட்டு அவற்றின் மரணம் அல்லது நோய்வாய்ப்படுவதில் முடிகிறது. இதனால் அவை உள்நோய்க்கிருமிகள் (entomopathogenic) என்றழைக்கப்படுகின்றன.  மேலை நாட்டு பழங்கதைகளில் ஜாம்பி என்பது இறந்த உடல் உயிர் பெற்று வந்து மற்றவர்களின் உடலையும் சிந்தனையையும் ஆக்கிரமிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் பூஞ்சைகள் அதைப் போல செயல்படுவதால் ஜாம்பி என்று அழைக்கப்படுகின்றன. சில்வண்டுகளில் தங்கும் ஒருவகை பூஞ்சைகள் ஆண் வண்டுகளின் உடலில் உளவியல் வேதிப்பொருட்களை செலுத்தி அவற்றை பெண் வண்டுகள் போல் சத்தமிட வைக்கின்றன. இதனால் கவரப்பட்டு வரும் பிற ஆண் வண்டுகளை தொற்றிக்கொள்கின்றன. ஒரே நேரத்தில் ஈயின் மரணத்தையும் பூஞ்சையின் உயிர்ப்பையும் காட்டும் ராபர்டோ கார்சியா ரோயின்  புகைப்படம் பிஎம்சி சுற்றுச்சூழல் மற்றும் பரிணாமம் புகைப்படப் போட்டியில் இந்த ஆண்டுக்கான பரிசினை வென்றுள்ளது.

♦மலேரியா நோய் தடுப்பில் புதிய ஆய்வு

   கொசுக்களின் உடலில் உள்ள நுண்கிருமிகள் மலேரியா நோயை பரப்புகின்றன. இப்போது மலேரியா நோயை பரப்பாதவாறு அறிவியலாளர்கள் கொசுவின்  உடலில் மாற்றங்களை செய்துள்ளனர். கொசுவின் குடலில் உள்ள ஒட்டுண்ணி கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கும் வேதிப்பொருட்களை உண்டாக்கும் விதமாக மரபணு மாற்றங்கள் செய்துள்ளனர். இதன் மூலம் கிருமிகள் கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளை அடையும் சாத்தியக் கூறுகள் குறைக்கப்படுகின்றன. ஆகவே கொசுக்கள் மனிதர்களை கடிக்கும்போது உமிழ்நீர் மூலம் பரவுவது தடுக்கப்படுகிறது. 

♦ சவூதி அரேபியாவில் பெண் விண்வெளி வீரர் பயிற்சி 
அடுத்த ஆண்டு விண்வெளியில் ஒரு பெண் வீரரை அனுப்பும் நோக்கத்தில் சவூதி அரேபியா ஒரு பயிற்சி திட்டத்தை தொடங்க உள்ளது.இது அதன் விண்வெளி திட்டம் 2030ன் ஒரு பகுதியாகும். முதன்முதலாக அந்த நாட்டிலிருந்து விண்வெளிக்கு சென்றவர் இளவரசர் சுல்தான் பின் சல்மான்.இவர் நாசா திட்டத்தில் 1985ஆம் ஆண்டு விண்வெளிக்கு சென்றார். 

♦ புரதங்களின் ஆய்வில் செயற்கை  நுண்ணறிவு 

புரதங்கள் நமது செல்களின் பணிகளை செய்யும் திறன் மிகு இயந்திரங்கள் என்று சொல்லலாம். அவை வேதிவினைகளின் கிரியா ஊக்கிகளாக டிஎன்ஏக்களை கட்டமைப்பது அல்லது பிரதிஎடுப்பது போன்ற பல்வேறு  பணிகளை செய்கின்றன. அவற்றின் தோற்றங்கள் குறித்து அறிவது அவை எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை தெரிந்து கொள்ள உதவும். நமது உடலில் உள்ள புரதம் என்பது அமினோ அமிலங்களின் மூலக்கூறுகள் அடங்கிய நீண்ட இழை. இதுவரை இவை எந்த வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமே அறியப்பட்டிருந்தது. ஆனால் இவை எவ்வாறு பின்னியுள்ளன மற்றும் மடங்கியுள்ளன என்பது மிக முக்கியமான தகவல் ஆகும். தற்போது ஆல்ஃபா ஃபோல்ட்(ALPHA FOLD) எனும் செயற்கை நுண்ணறிவின் மூலம் இது குறித்த அறிவியல் விரிவடைந்துள்ளது. இதுவரை புரதங்களின் அமைப்பு எக்ஸ்ரே கிரிஸ்டல்லோ கிராஃபி, நியூக்கிளியர் மேக்னடிக் ரெசனன்ஸ், க்ரையோஜெனிக் எலெக்ட்ரான் மைக்ரோஸ் கோப்பி ஆகியவற்றின் துணை கொண்டு  நிர்ணயிக்கப் பட்டன. இது நீண்ட நேரம் பிடிக்கும் முறைகள் ஆகும். எனவே இலட்சக்கணக்கான புரதங்களில் மிகக் குறைவான வற்றின் அமைப்பே கண்டறியப்பட்டிருந்தது. ஆல்பா புரோட்டீன் அமைப்பு தரவுதளம் (AlphaFold Protein Structure Database) என்கிற தளத்தில் புரதங்களின் அமைப்பை மிகத் துல்லியமாக கணிக்கக்கூடிய தரவுகள் உள்ளன. இவை எல்லோருக்கு் பயன்படக்கூடிய திறந்த வகை தரவு தளமாகும்.  இந்த முறையானது இங்கிலாந்தி லுள்ள ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தை சேர்ந்த 27 ஆய்வாளர்களின் கூட்டு முயற்சி. அவர்களுடன்  செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டீப்மைண்ட் தொழில் நுட்பமும் இணைந்து  செய்துள்ள கண்டுபிடிப்பு. இந்த தரவுகள் கணினியின் மூலம் புரதங்களின் அமைப்பை கணிக் கின்றன. நவம்பர் 2021இல் விவரிக்கப்பட்ட முதல் வெளி யீட்டில் மனித மரபணு, எலி, பழ ஈ, வரிக்குதிரை மீன், தட்டைப் புழுக்கள், ஈ கோலி நுண் கிருமி, காசநோய்க் கிருமி போன்ற வற்றின் புரத அமைப்புகளும் சோயா பீன்ஸ்,சோளம்,அரிசி மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றின் மரபணு புரதங்களின் அமைப்புகளும் விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கை 360000 ஆகும். ஒப்பீடாக பார்த்தோமானால் 1950இலிருந்து இதுவரை  180000 புரத அமைப்புகளே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 2022இல் 10கோடிக்கு மேல் புரதங்களின் அமைப்பு தரவுகள் சேகரிக்கப்படும் என இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

 

 

;