politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

மே. வங்கத்தில் எரிந்த நிலையில் பெண் உடல்!
மால்டா:

ஹைதராபாத் சம்பவத்தைத் தொடர்ந்து? மேற்குவங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப் பட்டது அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உடல்அருகே ஒரு ஜோடி செருப்பும், சில தீக்குச்சிகளும் கிடந்துள்ளன. அந்த பெண் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் தீவைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

உ.பி. மாநிலத்தில் இளம்பெண் எரிப்பு
லக்னோ:

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத் தைச் சேர்ந்த 23 வயது பெண், கடந்த ஆண்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், வழக்கில் ஆஜராவதற்கு புறப்பட்டபோது, வல்லுறவுக் குற்றவாளிகள் உள் பட 5 பேர் சேர்ந்து அந்தப் பெண்ணை உயிரோடு எரித்துள்ளனர். இதில் 90 சதவிகித காயங்களுடன் அந்த பெண் உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கிறார்.

சட்டக்கல்லூரி மாணவிக்கு  ஜாமீன்!
அலகாபாத்:

பாஜக முன்னாள் மத்திய அமைச்சரும், சாமியாருமான சின்மயானந்த், சட்டக்கல்லூரி மாணவி ஒருவரை, நீண்டகாலமாக மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சின்மயானந்தா சிறையில் அடைக்கப்பட்டார். மறுபுறத்தில் பாதிக்கப்பட்ட மாணவியையும்- அவர் சின்மயானந்தாவிடம் பணம்பறிக்க முயன்றதாக கூறி உ.பி. பாஜகஅரசு சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் சட்டகல்லூரி மாணவிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது.

தில்லியில்  பெண் சுட்டுக்கொலை
புதுதில்லி:

தில்லியில் உள்ளரோகிணி செக்டார் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் குக்ரெஜா (62). இவரிடம் பெண் ஊழியராக பணியாற்றியவர் சுதாபா முகர்ஜி (50). இந்நிலையில் காருக்குள் டாக்டர் குக்ரெஜாவும், சுதாபா முகர்ஜியும் ரத்த வெள் ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். விசாரணையில் டாக்டர் குக்ரெஜா, சுதாபா முகர்ஜியை சுட்டுகொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
 

;