politics

img

சில எம்பிக்களின் செயல் : வெங்கய்யா வேதனை

மும்பை, ஜூலை 27- மாநிலங்களவையில் எம்.பி.க்களில்  சிலர் நடந்து கொள்ளும் முறையும், செயல் பாடுகளும் தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக  மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை தெரிவித்துள் ளார். மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணை யம் சார்பில் சனியன்று மும்பையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:  “மக்களின் பார்வையில் இருக்கும் போது, மாநிலங்களவையின் தலைவராக இருக்கும் எனக்கு, சில உறுப்பினர்கள் அவையில் விதிமுறைகளை, மரபு களை, மீறி அமளியில் ஈடுபடுவது வேத னையளிக்கிறது. அதிலும் குறிப்பாக சில பிரிவு உறுப்பினர்களின் கடந்த 2 ஆண்டு களின் செயல்பாட்டால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். நாடாளுமன்றம் அதற்குரிய மரபுகளு டன், விதிமுறைகளை மதித்து செயல்பட வேண்டும், இதற்கு முன் உறுப்பினர்களால் அவ்வாறுதான் செயல்பட்டது.  ஆனால், கூட்டத்தொடரின் போது அதிகாரப்பூர்வ அலுவலக கடிதங்களை கிழித்து, அவைத் தலைவர் மீது வீசுவதுதான் சில அறிவார்ந்த சில உறுப்பினர்களின் செயலாக இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை, சிறப்பை பேசமுடியாத, செயல்படவிடாத சூழ லுக்கு தள்ளும் என்று கூறினார்.

;