politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- கோவாவில் பாஜகவுக்குத் தாவிய 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி.
ச.சா - இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லைனு பாஜக சொல்லுமோ..??
**************
துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு :- எந்த மொழியையும் கட்டாயமாக திணிக்கக்கூடாது.
ச.சா - மத்திய அரசும் திணிச்சுக்கிட்டே இதத்தான் சொல்லுது..!!
**************
முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- மக்கள் எண் திட்டத்துக்கு ஆதார் எண் அவசியம்.
ச.சா - எப்புடியோ கட்டாயமில்லைனு சொல்லிட்டே எல்லாத்துலயும் ஆதார் எண்ணக் கொண்டு வந்துட்டீங்க..!!
**************
தபால் துறை :- போட்டித் தேர்வின் இரண்டாம் தாளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ச.சா - முதல் தாள்ல தமிழ் நீக்கப்பட்டது ஏன்..??

;