politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- தபால்காரர்கள் வங்கி அதிகாரிகள் ஆகிவிட்டார்கள்.
ச.சா - வங்கி அதிகாரிகள் வேலைக்கு ஆபத்து வரப்போகுதோ..??
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- முனைவர் பட்டம் பெற்றபின் எனது பொறுப்புகள் அதிகரித்துவிட்டது.
ச.சா - இதுவரைக்கும் எவ்வளவு பொறுப்போட இருந்தீங்கன்னு மக்களுக்குத் தெரியாதா..??
 

ஜம்மு - காஷ்மீர் அரசு அதிகாரிகள்:- ஜம்மு பள்ளிகளில் 100 சதவிகிதம் மாணவர்கள் வருகை.
ச.சா - பொய் சொல்றதுனு முடிவெடுத்தாச்சுனா எதுக்கு குறைச்சு சொல்லனும்னு நெனச்சுட்டாங்களோ..??
 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்:- பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காகவே பிரத்யேக திட்டம் ஒன்றை வடிவமைக்க உள்ளேன்.
ச.சா - எத்தனை லட்சம் கோடிகள் திவாலாகப் போகுதோ..??

;