politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி : - வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் அடையாளம்.
ச.சா - அப்புறம் எதுக்கு ஒரே மொழினு பிடிவாதம் பிடிக்குறீங்க..?
 

மத்திய அரசு :- பதுக்கல் தங்கத்துக்கு பொது மன்னிப்பு திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை.
ச.சா - பதுக்குனவங்களக் காப்பாத்த வேற வழி வெச்சுருக்கீங்களோ..??
 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற முடியும்.
ச.சா - அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் சங்கங்கள்தான் கூட்டமைப்பா சேர்ந்துருக்காங்கன்னு முதல்வருக்குத் தெரியாதா..?
 

செய்தி :- காந்தி கண்ட கனவை நனவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக பாதயாத்திரை.
ச.சா - இவங்க காணுற கனவெல்லாத்தையும் அவர் மேல போட்டுருவாங்களோ..??

;