politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- மாநிலக் வாரியங்களை ஒழுங்குமுறைப்படுத்த தேசிய அமைப்பு உருவாகிறது.
ச.சா - கல்வித்துறைய மொத்தமா மத்திய அரசோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வராங்க..!!

தமிழ்நாடு அரசு :- ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தையை மீட்கும் கருவியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு.
ச.சா - கண்டுபிடிச்ச பிறகு, மலக்குழி அடைப்பை நீக்குற கருவி மாதிரி கிடப்புல போட்டுற மாட்டீங்களே..??
 

செய்தி :- ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு காஷ்மீர் சென்றது.
ச.சா - இவங்க பயணத்த ஏற்பாடு பண்ணுனது சர்வதேச வர்த்தக புரோக்கராமே..??
 

ஹரியானா முதல்வர் கட்டார்:-  பாஜக-ஜேஜேபி இடையில் குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும்.
ச.சா - ஊழல் வழக்குல உள்ள இருக்குறவருக்கு விடுமுறை வாங்குனதுலருந்து செயல்திட்டம் துவங்கிருச்சே..!!

;