politics

img

தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதியில் சோதனை

தூத்துக்குடி, மே 14-தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை செவ்வாயன்று (மே 14) ஓட்டப்பிடாரத்தி லிருந்து துவங்கினார். தூத்துக்குடி வந்தால் அவர் வழக்கமாக தங்கும் கோரப்பள்ளத்திலுள்ள சத்யா ரிசார்ட்டில் ஓய்வெடுப்பதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் காலை முதல் சத்யா ரிசார்ட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர்.பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனைமேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரிசார்ட்டுக்கு வரும் இருசக்கர வாக னம் உள்பட அனைத்து வாகனங்கள் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரால் சோதனைக்கு உள்ளாக்கப் பட்டது. மேலும் விடுதிக்கு கொண்டு வரப்பட்ட ஸ்டாலினின் பிரச்சார வாகனம் மற்றும் திமுகவினரின் வாகனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.பிரச்சாரம்இதற்கிடையே சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம்சென்றடைந்த ஸ்டாலின், அங்கிருந்துநேரடியாக பிரச்சாரக் களத்திற்குச் சென்றார். ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட ராமச்சந்திரபுரம், காமராஜர் புரம் உள்ளிட்ட பகுதிகளில் திண்ணைப் பிரச்சாரம் மூலம் மக்களைச் சந்தித்து திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, மாநி லங்களவை உறுப்பினர் கனிமொழி, எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் ஆகி யோர் அப்போது உடனிருந்தனர்.இதனைத் தொடர்ந்து மாலை யில்தான் பிரச்சாரம் என்பதால் ஓய்வெடுப்பதற்காக சத்யா ரிசார்ட்டுக்குச் சென்றார். ஸ்டாலின் அங்கு வருவதற்கு முன்பே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

பிரச்சாரம்

இதற்கிடையே சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம்சென்றடைந்த ஸ்டாலின், அங்கிருந்துநேரடியாக பிரச்சாரக் களத்திற்குச் சென்றார். ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட ராமச்சந்திரபுரம், காமராஜர் புரம் உள்ளிட்ட பகுதிகளில் திண்ணைப் பிரச்சாரம் மூலம் மக்களைச் சந்தித்து திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, மாநி லங்களவை உறுப்பினர் கனிமொழி, எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் ஆகி யோர் அப்போது உடனிருந்தனர்.இதனைத் தொடர்ந்து மாலை யில்தான் பிரச்சாரம் என்பதால் ஓய்வெடுப்பதற்காக சத்யா ரிசார்ட்டுக்குச் சென்றார். ஸ்டாலின் அங்கு வருவதற்கு முன்பே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.


;