politics

img

தமிழகம், புதுவையில் இன்று வாக்குப்பதிவு

தேர்தல் ஆணையமா? ஆளுங்கட்சிகளின் தேர்தல் ஏஜெண்டா?


சென்னை, ஏப். 17-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் வேட்பாளர்கள் மற்றும் கட்சிநிர்வாகிகள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தால் தொடர்ந்து அலைக்கழிக்கப் படுகின்றனர். ஏற்கனவே வேலூர் தொகுதியில் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆளுங்கட்சிகளின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் தேர்தலை ரத்து செய்துள்ளது.இதனுடைய அடுத்தக்கட்டமாக செவ்வாய் (16.04.2019) இரவு 8 மணிக்குதூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கவிஞர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் காங் கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தலை ரத்து செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார். இதற்கு முன்பு தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர். இவ்வாறு மாறி, மாறி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் வீடுகளிலும், வேட்பாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தும் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம், புகார்கள் அளித்த பின்பும் பகிரங்கமாக பண விநியோகத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக,பாஜக தலைவர்களின் வீடுகளில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. 


ஆளுங்கட்சி வேட்பாளர்களை பண விநியோகம் செய்வதற்கு தாராளமாக அனுமதித்து விட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை சோதனை என்ற பெயரில் தேர்தல் பணிகளை முடக்குவதும், மக்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரத்திற்கு வழிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருவது பாரபட்சமான செயல் மட்டுமல்ல, வன்மையான கண்டனத்திற்குரியது.தேர்தல் பிரச்சாரம் 16.04.2019 மாலை 6 மணியுடன் முடிந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் வேட் பாளர்களின் வீடுகளில் சோதனை நடத்துவது திட்டமிட்ட சதியாகும். அனைத்து தொகுதிகளிலும் தாங்கள் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில் அதிமுக - பாஜக தேர்தல் ஆணையத்தை ஒரு கருவி யாக பயன்படுத்தி இத்தகைய மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் தோல்வி பயத்தால் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தரராஜனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு என்றே கவிஞர் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பதில் இரண்டுகருத்து இருக்க முடியாது. இத்தகைய குறுக்கு வழியை பயன்படுத்தி தமிழிசை சவுந்தரராஜனோ மற்றும் அதிமுக, பாஜக வேட்பாளர்களோ வெற்றி பெற்று விடலாம் என்பது பகல் கனவாகவே முடியும். மேலும், மேலும் எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது பொதுமக்கள் மத்தியில் அதிமுக - பாஜக அணியின் மீது கோபாவேசம் அதிகரிக்குமே தவிர அவர்களுக்கு பயன்தராது என்பது திட்டவட்டமானதாகும்.எனவே, தேர்தல் ஆணையம் அதிமுக - பாஜக அணியின் தேர்தல் ஏஜெண்ட்டு போல செயல்பட்டு வரும் போக்கினை கைவிட்டு, நடுநிலையிலிருந்து நேர்மையாக செயல்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள்


மு.க.ஸ்டாலின் உறுதி


சென்னை, ஏப். 17-தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் இன்று ஏப்ரல் 18 நடைபெறவுள்ள நிலையில் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள்; மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.புதன் காலை கோபாலபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “ஆளும்கட்சி எவ்வளவு கோடி, கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும், ஓட்டுக்கு ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று கொடுத்தா லும் சரி. தமிழகத்தில் இருக்கக் கூடிய ஆட்சியையும், மத்தியில் இருக்கும் ஆட்சியையும் அப்புறப்படுத்த மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். தேர்தலில் பணத்துக்கு யாரும் அடிமையாக மாட்டார்கள். நிச்சயமாக, இது ஒரு புதிய தேர்தலாக அமையும்” என்று கூறினார்.தூத்துக்குடி சோதனை குறித்துப் பேசிய அவர், மிரட்டலுக்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் திமுக அஞ்சாது என்று குறிப்பிட்டார்.வேலூர் தேர்தல் ரத்து தொடர்பாகப் பேசிய அவர், ஜனாதிபதியே கையெழுத்துப் போட்டிருக்கிறார். இவ்விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார். சேலத்தில் வீதி வீதியாக சென்ற முதல்வர் எடப்பாடி, பழத்துக்குப் பணம் கொடுத்ததாக கூறுகிறார். அப்படியானால் ரகசியமாக மறைத்து ஏன் கொடுக்க வேண்டும். பழத்துக்குக் கொடுத்தேன் என்று கூறுவது ஊரை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகம் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.முன்னதாக டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குப் பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, பாதுகாப்பான ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று தெரிவித்தார்.பாசிச பாஜகவை அகற்றுவதே எங்களது நோக்கம் என்று தெரிவித்த ஸ்டாலின், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், இடதுசாரி மற்றும் இதர கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மதச்சார்பற்ற ஆட்சியமைவதை உறுதி செய்வோம் என்று தெரிவித்தார். இந்த தேர்தலில் பிராந்திய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் குறிப்பிட்டார்.“தமிழகத்தில் முன்னாள் முதல்வர்ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுஇந்த ஆட்சியை ஏன் கலைக்கவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனை நாங்கள் ஜனநாயக முறை யில் மட்டுமே செய்ய விரும்புகிறோம். 22 தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் மூலம் அதிமுக ஆட்சியை நீக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது” என்று கூறிய ஸ்டாலின், திமுக மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார்.தற்போது நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை கிடைத்தால் திமுக ஆட்சி அமைக்குமா, அல்லது சட்டமன்றத்தைக் கலைக்க கோரிக்கை வைக்குமா என்ற கேள்விக்கு இந்த தேர்தல் மத்தியிலும் மாநிலத்திலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என பதிலளித்தார்.



;