politics

img

ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் கருத்தரங்கம்

ஒசூர், ஏப். 15-ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.கல்லூரி கணிதத்துறையில் “நவீன கணிதம்” குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத் தலைவர் மயில் வாகணன் வரவேற்றார். சென்னை பல்கலைக்கழக ராமானுஜம் நிறுவனத்தின் நவீன கணிதத் துறை இயக்குநரும், தலைவருமான முனைவர் ஜி.பி யுவராஜ் கலந்து கொண்டார். மாணவர்களிடம் நவீன கணித நுணுக்கங்களையும் வெற்றிடத்தை துல்லியமாக அளவிடும் முறையையும் விளக்கினார். ஓவியத்தைக் கண்டு ரசிப்பது போல கணிதத்தை ரசிக்க வேண்டும். மந்திரம் ஓதுவதைப் போல மனப்பாடம் செய்வதை விட்டு பயிற்சி முறையில் கணிதத்தை அணுகும் பொழுது அது நம்மை அடையாளப்படுத்தும். இல்லையென்றால் பயன்பாடு இல்லாமல் பட்டங்களைப் பெறுவதோடு மட்டும் நின்றுவிடும் என்றார்.ஓசூர் எஜனிவன் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் பொறியாளர் கவுதம் பழனி கலந்து கொண்டு திட்டமிடல், தொலைநோக்குச் சிந்தனை, மனிதநேயம், சமூக அக்கறை, பெற்றோர் களை மதித்தல் ஆகிய பண்புகள் இருந்தால் மட்டுமே நாம் பெற்ற பட்டம் நமக்கும் இச் சமூகத்திற்கும் பயன்படும் என்றார்.எம்.ஜி.ஆர்.கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.முத்துமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இன் றைய விஞ்ஞானத்துறைக்கு கணிதம்தான் அடிப்படையாக அமைந்துள்ளது எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் சமகால சூழலுக்கு ஏற்றார் போல எளிமையான புதிய கணிதமுறைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது இறுதியாக கணிதத்துறை பேராசிரியர்  ராஜேஷ்வரி நன்றி கூறினார்.

;