politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ :- மினி பொதுத்தேர்தல் மாதிரி நடந்த இடைத்தேர்தலிலும் 9 தொகுதிகளில் எங்களை மக்கள் வெற்றி பெறச் செய்தனர்.
ச.சா - அதோட சேர்ந்து நடந்த பொதுத் தேர்தல்ல பெரிய அடி குடுத்தாங்களே.. அத மறந்துட்டீங்களோ..??

செய்தி : - மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை 3.7 சதவிகிதமாக உயரும்.
ச.சா - இதுவுமே புள்ளிவிபரங்கள்ல தில்லுமுல்லு பண்ணுன பிறகுதானே..??
 

துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி :- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் ரூ.1 லட்சம் கோடி சேமிக்கப்படும்.
ச.சா - ரிசர்வ் வங்கிப் பணத்தக் கொள்ளையடிச்ச மாதிரி, அடுத்து ஏதோ திட்டம் போடுறாங்களோ..?
 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் :- சீனாவால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்.
ச.சா - பாரசீக வளைகுடாவுல போர்க்கப்பல்களக் குவிக்குற செய்திய மறைக்க இந்தப் பொய்க் குற்றச்சாட்டா..??
 

 

;