politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 1500 நிதியுதவி!

மகாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா தொற்று பாதிப்பையொட்டி பொதுமுடக் கம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. இந்நிலையில், மாநிலத்தை ஆளும் உத்தவ்தாக்கரே அரசானது, ஆட்டோ ஓட்டுநர்களின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு,சுமார் 7.2 லட்சம் பேருக்கு தலா ரூ.1500விகிதம் நிவாரண உதவி அறிவித்துள் ளது. இதற்காக ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

                               ***************

ஆர்ஜேடி எம்எல்ஏக்களை சந்தித்த லாலு பிரசாத்!

சிறையில் இருந்து வெளியே வந்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், அக்கட்சி எம்எல்ஏக்களை காணொலி மூலம் சந்தித்து உரையாடியுள்ளார். கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் பீகார் மக்களுக்கு முடிந்தளவு உதவி செய்ய வேண்டும் என்று அவர்கேட்டுக் கொண்டுள்ளார்.

                               ***************

‘நாரதா’ லஞ்ச வழக்கு: சிபிஐ விசாரிக்க ஒப்புதல்

மேற்கு வங்கத் தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச் சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தனியார் நிறுவனம் ஒன் றுக்கு சலுகைகள் அளிப்பதாக கூறி, அந்த நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியதை, ‘நாரதா’ இணையதளம் 2016-ஆம்
ஆண்டில் வீடியோவாக படம்பிடித்து வெளியிட்டது. இந்த வழக்கை தற்போதுசிபிஐ விசாரிக்க, ஆளுநர் ஜக்தீப் தன்கர்ஒப்புதல் வழங்கியுள்ளார்.

                               ***************

அசாமில் 9 வயதுச் சிறுமி பாலியல் வன்கொலை!

பாஜக ஆளும் அசாம் மாநிலம் நகாவன் மாவட்டத்தில்  வீட்டுவேலை செய்து வந்த 12 வயது சிறுமி, 2 வாரங்களுக்கு முன்புபாலியல் வன் கொடுமை செய்யப் பட்டு, தீ வைத்து எரித்துக் கொல்லப் பட்டார். இதனிடையே, அசாமின் லகிம்பூர் மாவட்டத்திலுள்ள சால்துவா நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி  ஒருவரும் பாலியல் வல்லுறவுக்கு உள் ளாக்கப்பட்டு- தூக்கிலிடப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 17 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

                               ***************

கங்கனாவின் பதிவை நீக்கிய இன்ஸ்டாகிராம்!

பாஜக ஆதரவு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில் ‘கொரோனா சிறிய காய்ச்சலே தவிர வேறு ஒன்றும்இல்லை; ஊடகங்கள்தான் இதைப்பெரிதுபடுத்துகின்றன’ என்று அலட்சியமாக கூறியது கடும் சர்ச்சையை ஏற் படுத்தியது. இதையடுத்து, கங்கனாவின் அந்த பதிவை இன்ஸ்டாகிராம் நிறுவனம் நீக்கியுள்ளது.

;