politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்...

விவசாயிகளை ஆதரித்ததற்கு கிடைத்த தண்டனை

“விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நடந்து கொண்டதால், பாஜக தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து என்னை தண்டித்து விட்டது. தில்லியில் அதிகாரம் அனைத்தும் துணை நிலை ஆளுநருக்குத்தான்.. மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்றால், என்ன மாதிரியானசட்டம் இது?” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குமுறலை வெளிப் படுத்தியுள்ளார்.

                         **************

வாக்காளர்கள் 90 பேர்; வாக்குகள் பதிவு 171

அசாம் மாநிலம் ஹப்லாங் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் கடந்த ஏப்.1 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராமத் தலைவர் ஒருவர்புதிய வாக்காளர் பட்டியலுடன் வந்து, அதன்படி வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதனை அங்கு பணியில் இருந்தவர்களும் ஏற்றுள்ளனர். இந்நிலையில் 90 வாக்குகளுக்குப் பதில்171 வாக்குகள் பதிவானது தெரியவந்ததை அடுத்து, அங்கு தேர்தல் பணியில்இருந்த 5 பேரை சஸ்பெண்ட் செய்துமாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 

                         **************

6 மாதங்களில் கோரிக்கை ஏற்கப்படும் என நம்புகிறோம்

பாரதிய கிஷான் யூனியன் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் ராஜஸ்தானில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், “வேளாண் சட்டம் தொடர்பாக குஜராத் விவசாயிகளை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளோம். பர்தோலி மற்றும் சபர்மதிக்கும் செல்ல உள்ளோம். அடுத்த 5 அல்லது 6 மாதங்களில் மத்தியஅரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

                         **************

சொத்துத் தகராறில்  துறவி அடித்துக் கொலை?

அயோத்தி ஹனுமான் காரி கோயிலைச்சேர்ந்த துறவி கன் னையா தாஸை, மர்மநபர்கள் சிலர் அடித்துக் கொலை செய்தனர். அவரது உடல் சரண்பதுக்கா கோவில்கோசாலையில் கிடந்தது. இதுதொடர் பாக விசாரணை நடந்துவரும் நிலையில், துறவி கன்னையா தாஸூக்கும், கோலு தாஸ் என்ற சஷிகாந்த் தாஸூக்கும் சொத்து தகராறு இருந்ததாகவும், இந்தபிரச்சனையிலேயே அவர் கொல்லப் பட்டிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

                         **************

கர்நாடக பாஜக எம்எல்ஏ சாட்சிகளை அழிக்க முயற்சி 

பாஜக-வைச் சேர்ந்த கர்நாடக முன் னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, இளம்பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார். இந்த வழக்கில் ஜர்கிஹோலிக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், பெங்களூரு காவல்துறை ஆணையருக்கு 3 பக்ககடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  ஜர்கிஹோலியை காப்பாற்றுவதற்காக, ஆர்.டி.நகரில் உள்ள தங்கும் விடுதியில்சாட்சியங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

;