politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

பெங்களூரு சுடுகாட்டில்  ஹவுஸ்ஃபுல் போர்டு!

பாஜக ஆளும் கர் நாடகத்தில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழந்தவர் களின் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் இடமில்லாத நிலைஏற்பட்டுள்ளது. இதனால் சுடுகாட்டில் ‘ஹவுஸ் புல்’ என்று பலகை மாட்டும் அவல நிலை உருவாகியுள்ளது. பாதி எரிந்து கொண்டிருக்கும் உடல்களை நாய்கள் கவ்வி இழுத்துச்சென்று தெருவில் போட்டு கடித்துக் குதறும் சம்பவங்களும் அரங்கேறத் துவங்கியுள்ளன.

                              ***************

பாஜக தோற்றது; கொரோனா வென்றது!

‘மேற்குவங்கத்தை வெல்லும் ஒரே நோக்கத்துடன் பிரதமர் மோடி யும், அமித்ஷாவும் களத்தில் நுழைத்து கொரோனா தடுப்புவிதிகளை புறம்தள்ளிவிட்டு பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங் களை நடத்தினர். ஆனால், மேற்கு வங்கதேர்தல் முடிவை பற்றி ஒரே வரியில்சொல்லவேண்டும் என்றால் பாஜகதோற்றுள்ளது. கொரோனா வென்றுள் ளது’ என்று சிவசேனா தனது ‘சாம்னா’ பத்திரிகையின் தலையங்கத்தில் குறிப் பிட்டுள்ளது.

                              ***************

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்க்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி!

தில்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ள நிலையில், இதனால் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ள ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 மாதங்களுக்கு ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

                              ***************

24 பேர் மரணம்; பாஜக அரசின் படுகொலை!

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட் டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உள்பட 24 பேர்ஆக்சிஜன் பற்றாக் குறையால் உயிரிழந்தநிலையில், ‘இவை வெறும் மரணம்அல்ல. பாஜக அரசால் மேற்கொள்ளப் பட்ட படுகொலை’ என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா விமர்சித்துள்ளார். மேலும், ‘இந்த மரணங்கள் பற்றி நீதிமன்ற விசாரணை வேண்டும்’ என்றும் சித்தராமையாவலியுறுத்தியுள்ளார்.

                              ***************

போலிச் செய்தி பரப்பிய கங்கனா ரணாவத்!

பாலிவுட் திரைத்துறையில், பாஜக மற்றும் இந்துத்துவா ஆதரவு நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். சக நடிகர் - நடிகையரையே தரக்குறைவாக விமர்சிக்கும் இவர், தில்லியில் போராடும் விவசாயிகளை, தீவிரவாதிகள் என்று விமர்சித்து கடும்கண்டனங்களுக்கு உள்ளானார். இந்நிலையில், கங்கனாவின் டுவிட்டர்கணக்கு அதிரடியாக முடக்கப்பட்டுள் ளது. ஆக்சிஜன் குறித்து போலிச் செய்திகளை பரப்பியதாக கூறி, டுவிட்டர் நிறுவனமே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

;