politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மூடிஸ் ஆய்வு நிறுவனம் :- அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருக்கும்.
ச.சா - இப்ப எப்புடி இருக்கும்னு போன வருஷம் சொன்னது நடக்கலியே..??
 

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்:- பிரான்ஸ் பயணம் மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்தது.
ச.சா - எலுமிச்சம்பழம் ஏற்றுமதி ஆர்டர் வாங்கிருப்பாரோ..??
 

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்:- மத்திய அரசின் வருமானம் குறையும் என்று தெரிந்தும் பெரு நிறுவனங்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது.
ச.சா - அதுதான நெருக்கடிய இன்னும் அதிகமாக்கியிருக்கு..!!
 

தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி :- நாங்கள் யாருக்கும் அடிமையில்லை.
ச.சா - இப்ப எதுக்கு இந்த வாக்குமூலம்..??

;