politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மார்ச் மாதத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தாமல் நிறுத்தி வைப்பதென எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விகிதங்களின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக அரசு யோசித்து வருவதாகவும், அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.

உண்மையில் இது மோடி அரசாங்கத்தின் அப்பட்டமான மோசடியே ஆகும். ஏனென்றால் தினந்தோறும் அதிகரிக்கப்படும் பெட்ரோலிய விலைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசு எதுவும் செய்யவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது. இந்த நிலையில், பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் விலை உயர்வை நிறுத்தி வைப்பதாக பம்மாத்து செய்வது மக்களை திசை திருப்பும் உள்நோக்கம் கொண்டதாகும். உண்மையில் மோடி அரசு பெட்ரோலிய விலை கட்டுப்படுத்த விரும்பினால், அதன் மீது விதிக்கப்பட்டிருக்கும் கலால் வரிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுதான் பலனளிக்கும். மாறாக, தேர்தல் காலத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவது மக்களுக்கு பலனளிக்காது. 5 மாநிலங்களிலும் பாஜகவை முற்றாக வீழ்த்துவீர்.

                                            ***************

பெட்ரோலிய விலை உயர்வுகளில் மிக முக்கியமானது எல்பிஜி சமையல் எரிவாயு விலை உயர்வாகும். கடந்த 7 ஆண்டு காலத்தில்சமையல் எரிவாயு விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2014 மார்ச் 1 அன்று ரூ.410.50 ஆக இருந்த சிலிண்டர் விலை இன்று ரூ.819. எரிவாயு மற்றும் இதரப் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகள் மட்டும் இந்த காலத்தில் 459 சதவீதம் அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எனவே அரசாங்கமே ஒப்புக் கொண்ட விஷயத்தை மூடி மறைக்க அதேஅரசாங்கம் முயற்சிப்பது அநீதியானது. இந்த விலை உயர்வுகளின் விளைவுகள், மக்களின் அன்றாட வாழ்வியலின் அடுத்தடுத்த பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அனைத்து பொருட்களின் விலைவாசியும் கடுமையாகஅதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் பெட்ரோல் - டீசல் மீதான வரி வருவாய் மட்டும் மத்திய அரசுக்கு ரூ.52,537 கோடியாக இருந்தது. 2020 - 21 இல் இது ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதுஅனைத்தும் மக்களின் பணம்.எனவே இரட்டை வேடம் போடும் பாரதிய ஜனதா கட்சியை மன்னிக்காதீர்!

தோழர் சீத்தாராம் யெச்சூரியின் அப்டேட் கருத்துக்களுக்கு கீழே உள்ள சமூக வலைத்தள லிங்க்கை கிளிக் செய்யவும்...  

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர்  : https://twitter.com/SitaramYechury

;