politics

img

மகாராஷ்டிரா ஊராட்சி தேர்தல்: சிபிஎம் மகத்தான வெற்றி!

மகாராஷ்டிராவின் 18 மாவட்டங்களில் உள்ள 1165 கிராம பஞ்சாயத்துகளுக்கு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 100க்கும் மேற்பட்ட  பஞ்சாயத்துகளில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

பாரதிய ஜனதா 239 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவின் ஷிண்டே பிரிவு 113 பஞ்சாயத்துகளை கைப்பற்றியது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் என்சிபி 155 இடங்களிலும், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி 153 இடங்களிலும், காங்கிரஸ் 149 இடங்களிலும் வெற்றி பெற்றன.

நாக்பூர்: நாக்பூரின் சுர்கானா தாலுகாவில் தொடங்கிய அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் நீண்ட அணிவகுப்புக்குப் பிறகு சிபிஎம்  கவனத்தை ஈர்த்திருந்தது. சுர்கானாவில் 33 பஞ்சாயத்துகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.

நாசிக்: நாசிக்கில் கல்வன் தாலுகாவில் 8 பஞ்சாயத்துகளும், திரேயம்காஷேரியில் 7 பஞ்சாயத்துகளும், திண்டோராவில் 6 பஞ்சாயத்துகளும், பெட்டியில் 5 பஞ்சாயத்துகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்தது. நாசிக்கின் மொத்தமுள்ள 194 பஞ்சாயத்துகளில், சிபிஎம் 59 இல் வெற்றி பெற்றது. என்சிபி 51 பஞ்சாயத்துகளை வென்றுள்ளது. காங்கிரஸ் 9 மற்றும் பாஜக 13 பஞ்சாயத்துகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

தானே - பால்கர்: தானே பால்கர் மாவட்டங்களில், சிபிஎம் 26 பஞ்சாயத்துகளை கைப்பற்றியது - தஹானு தாலுகாவில் 9, ஜவஹரில் 5, தலஸ்ரீயில் 4 மற்றும் விக்ரமகாட் மற்றும் வாடியில் தலா 3. சிபிஎம் ஹஷாபூர் மற்றும் முர்பாத்தில் தலா ஒரு பஞ்சாயத்தை கைப்பற்றியது.

அகமதுநகர்: அகமதுநகர் மாவட்டத்தில், அகோலா தாலுகாவில் 6 பஞ்சாயத்துகளை சிபிஎம் கைப்பற்றியுள்ளது.

 

;