politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25.50 அதிகரித்துள்ளது. அதேபோல 19 கிலோ கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை ரூ.76 அளவிற்குஅதிகரித்துள்ளது. கடந்த ஏழு மாத காலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்விலை சுமார் 250 ரூபாய் அதிகரித்துள்ளது. 594 ரூபாயாக இருந்தது, இன்றைக்கு 834 ரூபாயைத் தாண்டியுள்ளது. ஏழை-எளிய நடுத்தர மக்களின்வாழ்வாதாரங்கள் மீது கிரிமினல் தனமான தாக்குதலை நடத்துவதில் மோடி அரசு எந்தவிதமான எல்லையும் இல்லாமல் சென்றுகொண்டிருக்கின்றது. இது எந்தவிதத்திலும் ஏற்க முடியாதது. உடனடியாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். 

                                               ********************

இந்திய மக்கள் மீது மற்றுமொரு மெகா சூறையாடலை நடத்தியிருக்கிறது மோடி அரசு. நமது வாழ்நாள் சிறுசேமிப்புகளை, தனது கூட்டுக்களவாணி நண்பர்களுக்கு கடன்கள் என்ற பெயரில் வாரி வழங்கும் பொருட்டு மடைமாற்றியிருக்கிறது. அந்தக் கூட்டுக்களவாணிகள் கடன் வாங்கிவிட்டு அதை திரும்பச் செலுத்தாமல் நாட்டைவிட்டே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நமது சிறுசேமிப்புகள் மீது மோடி அரசு நடத்தியுள்ள தாக்குதலை கவனியுங்கள். இந்த அரசுப் பொறுப்பேற்றது முதல் சிறுசேமிப்பு - நிரந்தர வைப்புத் தொகை மீதான வட்டி விகிதம் தொடர்ச்சியாக, கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.  2013-14ல் நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டிவிகிதம் 9.50 சதவீதமாக இருந்தது. 2014ல் 9.25 சதவீதமாக குறைந்தது. 2015ல் 8.25 சதவீதமாக சரமாரியாகக் குறைக்கப்பட்டது. 2016ல் 7.50 சதவீதமாகவும், 2017ல் 6.80 சதவீதமாகவும், 2018ல் 6.75சதவீதமாகவும், 2019ல் 6.50சதவீதமாகவும், 2020ல் 6.00சதவீதமாகவும் கடுமையாக குறைக்கப்பட்ட வட்டிவிகிதம் 2021ல் மேலும் வெட்டப்பட்டு 5.40சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

                                               ********************

கோவிட் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்ந்து தீவிரமான முறையில் நீடித்துக் கொண்டிருக்கின்றது. மேற்குவங்கம், தில்லி, குஜராத், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்கள் தொடர்ந்து புகார் கூறிய வண்ணம் உள்ளன. மோடி அரசு உடனடியாக செய்ய வேண்டியது கோவிட் மரணங்களுக்கு இழப்பீடு வழங்குவதும் தடுப்பூசி பற்றாக்குறையை துரித கதியில் சரிசெய்வதுமே ஆகும். ஆனால் தடுப்பூசிசப்ளையில் பற்றாக்குறை இல்லை என்று மீண்டும்மீண்டும் மோடியின் ஊடகச் செய்திகள் பொய் பேசுகின்றன. வெற்று ஆரவாரத்தைக் கைவிட்டு, உலகம் முழுவதிலும் எங்கெல்லாம் தடுப்பூசி கிடைக்கிறதோ அங்கெல்லாம் உடனடியாக கொள்முதல் செய்து கொண்டுவாருங்கள்.

                                               ********************

மாநிலங்களை கடுமையான நிதி நெருக்கடிக்குள் தள்ளி, அவர்களிடமிருந்து பறித்து தனது வருவாயை வலுப்படுத்தி கொண்டு வருகிறது மோடி அரசு. மாநில அரசாங்கங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் வேறு வழியின்றி மாநில அரசாங்கங்கள் வெளியில் கடன்வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.  அந்த வகையில் 1.1லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை மாநில அரசாங்கங்கள் கடனாக வாங்கி, கடன்வலையில் சிக்கியுள்ளன. ஆனால் 2020-21ஆம் ஆண்டிற்குரியஜிஎஸ்டி பங்குத்தொகை ரூ.63ஆயிரம் கோடியை மாநிலங்களுக்கு வழங்காமல் நிலுவை வைத்துள்ளது மோடி அரசு. இதன் விளைவு மாநிலங்கள் கடும் நெருக்கடியில் தவிக்கின்றன.

                                               ********************

அமுல் பால் நிறுவனம், பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ஜுலை 1முதல் ரூ.2 உயர்த்தியுள்ளது. நாடு தழுவிய முறையில் இந்த விலை உயர்வு அமலாக்கப்பட்டுள்ளது. பால் விலை உயர்வின் விளைவாக அமுல்நிறுவனத்தின் அனைத்து வகை பால் பொருட்களின் விலைகளும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் தினந்தோறும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுகள்; அதன் விளைவாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிகக் கடுமையான முறையில் அதிகரித்திருப்பது; இவற்றின் பின்னணியில் பால் விலையும் அதிகரிக்கப்பட்டிருப்பது - இவை அனைத்தும் சேர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களை மிக மோசமானமுறையில் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தநாட்டின் மக்கள் குறித்து ஒரு சிறு அக்கறையேனும் இருந்தால் உடனடியாகமக்களுக்கு நேரடி பண மானியம் தாருங்கள்; உணவு தானியங்களை உடனடியாக வழங்குங்கள்.

;