politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

விவசாயிகளின் எதிர்ப்பு போராட்ட முகாம்களை சுற்றி ராணுவ தடுப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டாலும் தண்ணீர்/ உணவு/ மின்சாரம்/ இணையதளம் ஆகியவற்றை தடுத்தாலும் விவசாயிகளின் போராட்டங்கள் மிகப்பெரிய அளவுக்கு வலுவடைந்த வண்ணம் உள்ளன. தில்லி/உத்தரப்பிரதேசம்/ஹரியானா ஆகிய இடங்களில் நடக்கும் இந்தப் போராட்டங்கள் தமது கோரிக்கைகள்  நிறைவேறும் வரை விவசாயிகள் ஓய மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறது. 

                                      *******************

இந்த கேலிச்சித்திரத்தை பார்த்த பிறகும் விவசாயிகள் குறித்த அரசாங்கத்தின் வஞ்சக அணுகுமுறை பற்றி சொல்வதற்கு ஏதாவது தேவை உள்ளதா? இரட்டை நாக்கு: பேச்சுவார்த்தைக்கு ஆர்வத்துடனும் தயாராகவும் இருப்பதாக நடிப்பு.  ஆனால் உண்மையில் விவசாயிகள் போராட்ட முகாம்களை சுற்றி தடுப்பு கோட்டைகள்/ தண்ணீர்/ உணவு/ மின்சாரம்/ இணையதளம் துண்டிப்பு. உள்ளொன்று புறமொன்று எனும் வஞ்சகமே உனது பெயர் தான் மோடி அரசாங்கமோ!

                                      *******************

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டுவீட் பதிவு செய்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக டுவீட் போடுமாறு விளையாட்டு வீரர்கள்/பாலிவுட் திரைப்படக் கலைஞர்களை நிர்பந்திக்க நேரம் இருக்கும் மோடி அரசாங்கத்திற்கு விவசாயிகளின் கோரிக்கைகளை கவனிப்பதற்கு போதுமான நேரமில்லை. மோடி அரசாங்கத்தின் முன்னுரிமைகள் என்ன என்பதை இது நமக்கு தெரிவிக்கிறது. பதில் மிக எளிதானது: மோடி தனது தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும்/விவசாயி
களிடம் மன்னிப்பு கோர வேண்டும்/மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;