politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ:- கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
ச.சா - கேள்விகள் தமிழ்லதான கேப்பீங்க..??
 

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா :- நம்பிக்கை வாக்கெடுப்பை திங்களன்று நடத்த வேண்டும்.
ச.சா - “பராமரிப்பு” செலவு அதிகமாகுதோ..??
 

கோவா பார்வர்டு கட்சி :- பாஜகவுக்கு ஆதரவு இல்லை.
ச.சா - சமயத்துல உதவுன உங்களத் தூக்கி எறிஞ்சுட்டாங்க.. என்ன பண்ணப் போறீங்க..??
 

செய்தி :- தபால் துறையின் பதவி உயர்வுத் தேர்வுக் கேள்வித்தாள் கடினமாக இருந்தது.
ச.சா - ஆங்கிலத்துலயும், இந்திலயும் மட்டும் கேள்வித்தாள் இருந்தா அப்படித்தான இருக்கும்..!!!

;